இனிமேல் விஜய் டிவியில் பிக் பாஸ் கிடையாதா..? பிக் பாஸ் 6ஐ உறுதி செய்த கமல் ஹாசன்
Kamal Haasan
Bigg Boss
Star Vijay
By Kathick
விஜய் தொலைக்காட்சியின் வெற்றிகரமான பிரமாண்ட நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இதனுடைய ஐந்தாவது சீசன் சில மாதங்களுக்கு முன் முடிவடைந்தது. இதில் ராஜு டைட்டில் வின்னர் ஆகியுள்ளார்.
ஐந்தாவது சீசனுக்கு பின் பிக் பாஸ் நிகழ்ச்சி இனிமே விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகாது என்று ஒரு தகவல் உலா வந்தது. விஜய் டிவிக்கு பதில் வேறொரு தொலைக்காட்சியில் பிக் பாஸ் வரும் என்று கூறினார்கள்.
இந்நிலையில், இதுகுறித்து பேசிய கமல் ஹாசன், பிக் பாஸ் சீசன் 6 விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும், நான் தொகுத்து வழங்குவேன் என்று கூறியுள்ளார். பிக் பாஸ் சீசன் 6 விஜய் டிவியில் ஒளிபரப்பு ஆகுமா என்று சந்தேகத்தில் இருந்த பலருக்கும், கமல் ஹாசனின் பதில் ஒரு முடிவை தந்துள்ளது.