நீங்கள் திருந்தாவிட்டால் திருத்தப்படுவீர்கள்..எனக்கும் வருத்தம் தான்!! ஆ ராசா..

Andimuthu Raja M K Stalin Gossip Today C Joseph Vijay CTR Nirmal Kumar
By Jai Sep 13, 2026 08:15 AM GMT
Report

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மிசா தியாகத்தை கொச்சைப்படுத்தி தமிழ்நாடு முதலமைச்சர் பேசியதை எதிர்த்து திமுக சார்பில் பல இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. அதில் திமுக தலைவர்கள் சேகர்பாபு, ஆர் எஸ் பாரதி உள்ளிட்ட பலர் முதல்வர் விஜய்யை ஒருமையில் பேசி விமர்சித்தனர்.

நீங்கள் திருந்தாவிட்டால் திருத்தப்படுவீர்கள்..எனக்கும் வருத்தம் தான்!! ஆ ராசா.. | If You Do Not Mend Your Ways You Will Be Set Right

அதிலும் எம் பி ஆ ராசா விஜய் குறித்தும் அமைச்சர் சிடி ஆர் நிர்மல் குமார் குறித்தும் பேசிய கருத்து கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியது. மாநில முதலமைசசரை தனிநபர் வன்மத்தையும், அநாகரிகமான வசவுகளையும் வீசுவது ஒட்டுமொத்த ஜனநாயக மாண்புகளுக்கு விடுக்கப்படும் பெரும் அச்சுத்தல் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் கணித்தார்.

மேலும் பலரின் கண்டனங்களை தொடர்ந்து ஆ ராசா, 'தியாகத்தில் விளைந்த ஒரு தலைவனின் அடையாளத்தை, உண்மையை வேண்டுமென்றே திட்டமிட்டு உள்நோக்கத்தோடு மீண்டும் மீண்டும் பொய் என்று கொச்சைப்படுத்தி ஏளனம் செய்ததால் ஏற்பட்ட வலியை உணர்த்த ஏளனம் செய்தவரின் அடையாளத்தை உண்மையை உணர்ச்சி உந்துதலில் கேள்விக்குள்ளாக்கியதில் எனக்கும் வருத்தம் தான்.

இத்துடன் என் வார்த்தைகளை திரும்பப் பெறுவதில் தயக்கமில்லை, நீங்கள் திருந்தாவிட்டால் திருத்தப்படுவீர்கள் என்று வருத்தம் தெரிவித்துள்ளார் ஆ ராசா.