மேடையில் நடிகை ரோகினியை அசிங்கப்படுத்திய இளையராஜா! எல்லாம் தலைக்கனம் தான்?
தமிழ் சினிமாவின் இசை ஜாம்பவனாகவும் இசைஞானியாகவும் திகழ்ந்து வருபவர் இளையராஜா. 1000 படங்களுக்கு மேல், 40 ஆயிரம் பாடலுக்கு மேல் இசையமைத்தவர் என்ற சாதனையை நிகழ்த்தி அனைத்து மக்களையும் தன் இசையில் உருகச் செய்துள்ளார். பெருமைமிக்க இளையராஜா கூட கோபத்தில் மேடையில் திட்டியும் அசிங்கப்படுத்துவது அப்போதில் இருந்தே நடந்து கொண்டு தான் இருக்கிறது.
ஆணவத்தின் உச்சிக்கு என்ற சில செய்திகள் பரபரப்பையும் ஏற்படுத்தியது. அப்படி இளையராஜாவின் 75 வது பிறந்தநாள் நிகழ்ச்சி சில வருடங்களுக்கு முன் நடைபெற்றது. கமல், ரஜினி உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் திரண்டு நடைபெற்றது.
நிகழ்ச்சியை நடிகை ரோஷினி தொகுத்து வழங்கினார். அப்போது நடிகர் விக்ரம் மற்றும் இயக்குனர் சங்கரை மேடையில் வரவழைத்து இளையராஜா பற்றி பேசியிருந்தனர். அப்போது சங்கரிடம் ரோஷினி இளையராஜா நீங்களும் இணைந்து பணியாற்ற ஆவலாக இருக்கும் என்று கூறியுள்ளார்.
உடனே, இதெல்லாம் தவறு எனக்கு நீ ஜான்ஸ் வாங்கி கொடுக்கிறியா என்றும் அவருக்கு தகுந்த இசையமைப்பாளரை அவர் தேர்வு செய்கிறார் என்று மேடையிலேயே அசிங்கபடுத்தியுள்ளார். உடனே ரோஷினியின் முகமாறி அமைதியாகிவிட்டார்.
இதுபோல் இளையராஜா பலரிடம் பலமுறை மேடையில் இப்படி நடந்து கொள்வது ரசிகர் மத்தியில் சங்கடத்தை ஏற்படுத்தி வருகிறார். ஆனால் இந்நிகழ்ச்சி பிறகு இளையராஜா அப்படி நடந்து கொண்டது எனக்கு வருத்தமாக இல்லை என்று கூறியிருக்கிறார் நடிகை ரோஷினி.