நீங்க எல்லாம் எனக்கு ஒரு ஆளே கிடையாது.. பொங்கி எழுந்த இளையராஜா!
Tamil Cinema
Ilayaraaja
Tamil
By Dhiviyarajan
இசை உலகின் ஜாம்பவானாக இருப்பார் தான் இளையராஜா. இவர் 47 வருடங்களாக தன்னுடைய இசையால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார்.
கடந்த மார்ச் மாதம் 31 -ம் தேதி வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிப்பில் வெளியான விடுதலை படத்திற்கு இசையமைத்திருந்தார். இப்படத்தில் இடம் பெற்றுள்ள பாடல்கள் அனைத்தும் ஹிட் ஆனது.
இளையராஜா தன்னை குறித்து வரும் சர்ச்சை கருத்துக்களுக்கு நேரடியா பதிலடி கொடுத்துவிடுவார். சமீபகாலமாக இளையராஜா தலைக்கனம் பிடித்தவர் என்று சிலர் சமூக வலைத்தளங்களில் கருத்து பதிவிட்டனர்.
இந்நிலையில் இதற்கு பதில் அளித்த இளையராஜா, என்னை குறித்து வரும் குற்றச்சாட்டுகளை நான் பெரிதாக கண்டுகொள்வதில்லை. நான் எப்போதும் இசையுடன் மட்டும் தான் போட்டி போடுவேன். என்னை விமர்சனம் செய்பவர்கள் எல்லாம் எனக்கு ஒரு ஆளே கிடையாது என்று கூறியுள்ளார்.