நீங்க புருடா விட நான் தான் கிடைச்சனா? இளையராஜாவுக்கு போன் போட்ட மோடி!!

Ilayaraaja Narendra Modi
By Edward Apr 29, 2022 05:42 AM GMT
Report

தமிழ் இசையின் ஜாம்பவனாக திகழ்ந்து வரும் இசைஞானி இளையராஜா சமீபத்தில் அம்பேத்கரையும் மோடியையும் ஒப்பிட்டு பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது. நான் சொன்ன கருத்தினை திரும்ப பெறப்போவதில்லை என்று ஆணித்தரமாக கூறியிருக்கிறார் இளையராஜா.

இதனால் பிஜேபி காரரளாக இளையராஜா மாறிவிட்டார் என பல விமர்சனங்கள் இணையத்தில் உலாவி வருகிறது. வருகிற சட்டமன்ற தேர்தலின் முன் ஏற்பாட்டால் பிஜேபி கட்சியினர் சினிமா பிரபலங்களை தங்கள் பக்கம் இழுக்க பிளான் செய்து வருகிறார்கள் என்ற பேச்சும் அடிபட்டு வருகிறது.

ஆனால் இளையராஜா இப்படி ஸ்ட்ராங்காக பேசுவது பெரிய விருதுக்காக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இளையராஜாவின் இப்படியான அணுகுமுறைக்கு ஒருபடி மேலாகா மோடி அவர்கள் இசைஞானிக்கு கால் செய்து நன்றி கூறியதாகவும்,

தன்னை புகழ்ந்து நீங்கள் முன்னுறை அமைத்தது என் பாக்கியம் என்றெல்லாம் கூறியுள்ளார் என செய்திகள் பரவி வருகிறது. இதற்கு பலர் உருட்டலாம் ஆனால் இந்த அளவிற்கு பெரிதாக கதைவிடக்கூடாது என்று கலாய்த்தும் வருகிறார்கள்.