நான் ஏன் மத்தவங்கள பாராட்டணும்.. தலைக்கணத்தில் பெரிய மனுஷன் செய்ற வேலையா இது

Ilayaraaja Gossip Today
By Edward Aug 11, 2022 09:30 AM GMT
Report

தமிழ் சினிமாவில் இசைஞானியாக திகழ்ந்து வரும் இளையராஜா 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடலை கொடுத்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். மேலும் பல கச்சேரி நிகழ்ச்சிகளை நடத்தியும் வருகிறார்.

இளையராஜா புகழ் உச்சிக்கு சென்ற நேரத்தில் அவரது நடவடிக்கையில் சில மாற்றம் ஏற்பட்டு சகோதரர், நண்பர்கள் என்றும் பார்க்காமல் ஆணவத்தில் பகைத்தும் இருக்கிறார். அந்தவகையில் ராயல்டி பிரச்சனைக்காக தனது சகோதரர் கங்கை அமரன், நண்பர்கள் எஸ்பிபி, மணிரத்னம், வைரமுத்து, பாக்யராஜ், பாலச்சந்தர், ஏ ஆர் ரகுமான் உள்ளிட்ட பலரிடம் பகைத்துக்கொண்டு பல ஆண்டுகளாக அவர்களிடம் இருந்து விளகி வருகிறார்.

இருக்கும் போது பகைத்து கொண்டு அவர்கள் இல்லாத போது வருத்தம் தெரிவித்து வரும் இளையராஜாவை பலர் விமர்சித்தும் வருகிறார்கள். அந்தவகையில் சமீபத்தில் பிரபல தொலைக்காட்சி சேனலுக்கு கதைகேளு கதைகேளு என்ற நிகழ்ச்சியை வழங்கியிருக்கிறார் இசைஞானி இளையராஜா. பிரபல இயக்குனர் வருகை தந்த அந்நிகழ்ச்சியில் நடிகர் நாசரும் கலந்து கொண்டுள்ளார்.

அப்போது நெறியாளர் ரங்கராஜ் பாண்டே சக கலைஞர்களை பாராட்டாமல் இருக்க என்ன காரணம் என்று கேட்டுள்ளார். அதற்கு இளையராஜாவின் பதில் எடக்குமுடக்காக இருந்துள்ளது.

நான் ஏன் புகழ்ந்து பேச மாட்டேங்கிறான் என்றால் நான் ஏன் புகழனும், என்னை புகழ்ந்து பேச வைக்கனும் என்றும் அடடா இந்த மாதிரி பாட்டு நம்ம பண்ணி இருக்கனுமே என்று நான் நினைக்கனும் என்று கூறியுள்ளார். என்னதான் இருந்தாலும் புகழ் பெற்ற இசை கலைஞர் மற்றவர்களை புகழ்ந்து பேசுவதால் குறைந்துவிட மாட்டார்களே என்று இளையராஜாவை விமர்சித்தும் வருகிறார்கள்.