இறந்த மகள் பவதாரிணி நினைவாக இளையராஜா செய்த காரியம்...
Tamil Cinema
Ilayaraaja
By Yathrika
பவதாரிணி
கடந்த வருடம் ஜனவரி மாதம் இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரிணி உடல்நலக் குறைவால் காலமானார்.
இலங்கையில் இருந்து அவரது உடல் சென்னை கொண்டு வரப்பட்டு அவர்களது சொந்த ஊரான தேனியில் பவதாரிணியின் அம்மா உடல் பக்கத்திலேயே தகனம் செய்யப்பட்டது.
அவர் இறப்பிற்கு பிறகு AI பயன்படுத்தி கோட் படத்தில் ஒரு பாடலை வைத்தார் யுவன் ஷங்கர் ராஜா.

தற்போது என்ன தகவல் என்றால் இளையராஜா தனது மகள் நினைவாக ஒரு விஷயம் செய்துள்ளார்.
அதுஎன்னவென்றால், பவதா மகளிர் ஆர்கெஸ்ட்ரா (Bavatha Girls Orchestra) என்ற 15 வயதுக்குட்பட்டவர்களக்கான ஆர்கெஸ்ட்ரா ஒன்றை உருவாக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் அதற்காக திறமையுள்ள பெண் பாடகர்கள் இசைக் கலைஞர்கள் தங்களைத் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார்.