இங்க இருக்கவங்களுக்கு துளிகூட அதுயில்ல! இயக்குனர்கள் பற்றி பேசிய இளையராஜா..
தமிழ் இசையின் இசைஞானி என்று அழைக்கப்படுபவர் இளையராஜா. சமீபத்தில் Children of Heaven என்ற படத்தின் அதிகாரப்பூர்வ மறுபதிப்பாக அக்கா குருவி என்ற பெயரில் தமிழ் ரீமேக்கில் எடுக்கப்பட்டுள்ளது. இயக்குனர் சாமி இயக்கத்தில் இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பேசிய இளையராஜா, Children of Heaven என்ற ஈரானிய படம் உலகளவில் பிரபலமானது. ஆஸ்கர் விருதினைவிட மிகப்பெரியளவில் பேசப்பட்ட படமாக அமைத்திருக்கிறார் இயக்குனர் மஜித் மஜீது.
அதேபோல் இந்தியாவை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட பியாண்ட் த க்ளவுட்ஸ் என்ற திரைப்படமும் கவனத்தை ஈர்த்துள்ளது. ஒரு சிறு ஷூவை வைத்து கொண்டு, சிறு குழந்தைகளின் உலகத்தை ஒரு சின்ன பிரச்சனையை அவர்கள் எப்படி சமாளிக்கிறார்கள் என்பதை மிக தத்ரூபமாக, இப்படி ஒரு அற்புதமான சினிமாவாக தந்துள்ளார் இயக்குனர்.
மேலும், என்னுடைய இசையில் வெளியாகும் படத்தினை தவிர எந்த படமும் பார்க்க நேரமிருக்காது. அப்படி வெளிநாட்டு படங்களை பார்க்க எனக்கு ஆர்வம் இருக்கும் என்று கூறியுள்ளார்.
இப்படியான படைப்புகள் தமிழ் சினிமாவின் இயக்குனர்கள் ஏன் இயக்குவதில்லை என்று கூறியுள்ளார். நாம் இந்த மாதிரியான புது இயக்குனர்கள் வரவேண்டும் அவர்களுக்கு நான் இசையமைக்க காரணமும் இதுதான். அதேபோல் தான் மணிரத்னம் படத்திற்கும் இசையமைத்து கொடுத்தேன் என தெரிவித்துள்ளார்.