36 வருட பகை! தலைக்கணத்தில் வைரமுத்துவிடம் வேலையை காட்டிய இளையராஜா!

vairamuthu tamilcinema ilaiyaraaja bharathiraaja
By Edward Feb 24, 2022 05:31 AM GMT
Report

இந்திய சினிமாவில் பல மொழிகளில் 40 ஆயிரத்திற்கு மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்தும் பல லைவ் கச்சேரிகளையும் நடத்தி இசைஞானியாக திகழ்ந்து வருபவர் இளையராஜா.. தன் பாடல்கள் தான் அனைவருக்கும் உயிராக இருக்கிறது என்று இளையராஜாவிறு ஒரு கர்வமும் இருக்கிறது.

அதேபோல் ஆணவத்தின் உச்சிக்கே சென்று நெருங்கி பழகி நகமும் சதையுமாக இருப்பவர்களை கூட பகைத்து கொண்டுள்ளார். அதற்கு காரணம் இளையராஜாவின் திமிரான ஒரு தலைக்கணம் தான் காரணம். எஸ்பிபி, கங்கை அமரன் உள்ளிட்ட பிரபலங்களிடன் சண்டைப்போடு தீராத பிரச்சனையை கொடுத்து வந்தார்.

அதேபோல் அந்தவரிசையில் இருப்பவர் கவிஞர் வைரமுத்து. 6 ஆண்டுகளே ஆரம்பகால சினிமாவில் நண்பர்களாக இருந்த இளையராஜா வைரமுத்து சில காரணங்களால் பகை முற்றுப்போய் பிரிந்தன. பாரதிராஜாவின் முதல் மரியாதை படத்தின் போது பூங்காத்து திரும்புமா என்ற பாடலில் இடம்பெற்ற மெத்தைய வாங்கினேன் தூக்கத்தை வாங்கலை என்ற வரியை வைரமுத்து மிகவும் ரசித்த படி எழுதியிருந்துள்ளார்.

ஆனால் இதனை இளையராஜா எனக்கு இந்த வரி பிடிக்கவில்லை மாற்றுங்கள் என்று கூறியுள்ளார். அதற்கு இருவருக்கும் முடியாது மாற்றுங்கள் என்ற விவாதம் போக கடைசில் இதே நிகழ்வு பல படங்களின் பாடலுக்கு தொடர்ந்துள்ளது. இதில் பாரதிராஜா கடும் கஷ்டத்தில் மாட்டித்தவித்துள்ளார்.. 36 வருடங்களாகியுள்ளது இருவரும் பேசினாலும் இணைந்து பாடல் அமைக்க முடியாமல் பகை தொடர்ந்துள்ளது.