ஆணவத்தில் மாறி மாறி அசிங்கப்படுத்திக்கொள்ளும் இளையராஜா - வைரமுத்து? வைரலாகும் வீடியோ..
சினிமாவை பொருத்தவரையில் குறிப்பிட்ட உயரத்திற்கு நட்சத்திரங்கள் சென்றாலும் தலைக்கனம் அதிகரித்து தன்னை அறியாமல் சில சர்ச்சையான செயல்களில் ஈடுபவார்கள்.
அப்படியான தமிழ் சினிமாவின் இசைஞானியாக விளங்கி வரும் இளையராஜா பெரிய உயரத்திற்கு சென்றாலும் அவரில் சில நடவடிக்கைகள் வெறுப்பை பெற்று வருகிறது. 40 ஆயிரம் பாடலுக்கு சொந்தக்காரராக இருந்தாலும் சக நட்சத்திரங்களிடமே பிரச்சனையை கொடுத்தும் வந்தார்.
ஆணவத்தில் அவர் நடந்து கொண்ட செயல்கள் இணையத்தில் சமீபத்தில் வைரலாகி வருகிறது. அதற்கு காரணம், மோடியையும் அம்பேத்கரையும் ஒப்பிட்டு பேசியது தான் தமிழ் மக்களை கோபத்தில் எழ வைத்தது.
அந்தவகையில் இளையராஜா ஒரு மேடையில் கவிஞர் கண்ணதாசனை போன்று வேறு கவிஞர் யாருமில்லை என்று கூறியிருந்தார்.
அதே மேடையில் இருந்த கவிஞர் வைரமுத்து மேடையில் வந்து பேசுகையில் கவிஞர் கண்ணதாசனைவிட சிறந்த கவிஞர் யாருமில்லை என்பதில் எங்களுக்கும் வேறுபாடில்லை.
ஆனால் உலகத்தில் சிறந்த இசையமைப்பாளர் எம் எஸ் விஸ்வநாதனை தவிர என்பதில் யாருக்கும் கருத்து வேறுபாடில்லை என்று பதிலடி கொடுத்து பேசியுள்ளார். 36 வருடங்களாக வைரமுத்துவிற்கும் இளையராஜாவிற்கு கருத்து வேறுபாடுகள் இருப்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.
இப்படி இரு உச்ச கலைஞர்கள் மாறிமாறி ஆணவத்தில் பேசுவதை பலர் மோசமான கருத்துக்களை கூறி விமர்சித்து வருகிறார்கள்.
இதெல்லாம் வேற நடந்திருக்கா???? pic.twitter.com/dRwJ28MZ6P
— இராஜசேகர்® (@KAG_SekarTwitz) April 18, 2022