வயித்தெரிச்சலில் இசைஞானி.. இசையமைப்பாளர்களை மட்டம் தட்டி பேசிய இளையராஜா..

Ilayaraaja Gossip Today
By Edward Aug 15, 2022 09:10 AM GMT
Report

தமிழ் சினிமாவில் மூத்த இசையமைப்பாளராக 70, 80களில் தன்னுடைய ஆட்சியை நிலைநாட்டி வந்தவர் இசைஞானி இளையராஜா. அதிலும் 80களில் எந்த படம் வெளியாகினாலும் இவர் இசை இல்லாமல் இருக்காது. அந்த அளவிற்கு இளையராஜாவின் மார்க்கெட்டுக்கும் இசைக்கும் டிமாண்ட் தான்.

அப்படி இருக்கும் போது இளையராஜாவை விட்டு இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், பாடகர்கள் அவரைவிட்டு விலக ஆரம்பித்தனர். மேலும் பலரிடம் ஆணவத்தில் ராயல்டி பிரச்சனை ஏற்படுத்தி சண்டை போட்டு வழக்கும் போட்டிருந்தார்.

இளையராஜா சமீபத்தில் பிரபல தொலைக்காட்சி சேனலில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பல அனுபவங்களை பகிர்ந்துள்ளார். நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய ரங்கராஜ் பாண்டே சக கலைஞர்களை பாராட்டாமல் இருக்க என்ன காரணம் என்று கேட்டுள்ளார்.

அதற்கு இளையராஜாவின் பதில் எடக்குமுடக்காக இருந்துள்ளது. நான் ஏன் புகழ்ந்து பேச மாட்டேங்கிறான் என்றால் நான் ஏன் புகழனும், என்னை புகழ்ந்து பேச வைக்கனும் என்றும் அடடா இந்த மாதிரி பாட்டு நம்ம பண்ணி இருக்கனுமே என்று நான் நினைக்கனும் என்று கூறியுள்ளார்.

என்னதான் இருந்தாலும் புகழ் பெற்ற இசை கலைஞர் மற்றவர்களை புகழ்ந்து பேசுவதால் குறைந்துவிட மாட்டார்களே என்று இளையராஜாவை விமர்சித்தும் வருகிறார்கள்.