இசையை வைத்து ரசிகர்களை ஏமாற்றும் இளையராஜா.. அப்பாவை அப்படியே காப்பி அடிக்கும் யுவன்..
சினிமாவை பொருத்தவரை ஒரு படம் வெளியாகிறது என்றால் அப்படத்தில் அமைந்திருக்கும் இசை மிகப்பெரிய பங்கினை வகிக்கும். அப்படி தமிழ் சினிமாவில் படம் ஓரளவிற்கு நன்றாக இருக்கிறதோ இல்லையோ அதன் இசை நன்றாக அமைந்தா அது வெற்றி படமாக கருதப்படும்.
அந்தவகையில் இசைஞானி இளையராஜா இசையமைத்த படங்கள் கதையளவில் தோல்வி தழுவினாலும் இசையை வைத்து பின்னி பெடலெடுத்து விடுவார். அந்தவகையில் அவரது இசையை அவரது மகன் யுவன் சங்கராஜா சில படங்களை ரீரெக்கார்ட் செய்து வருகிறார்.
தற்போதைய சினிமாவில் ஒரு படம் வெளியாகிறது என்றால் அப்படம் எதை காப்பி அடித்து எடுத்துள்ளார்கள் என்று கண்டுபிடித்து கலாய்ப்பதுண்டு. கதையானாலும் சரி இசையானாலும் சரி தற்போதைய கலைஞர்கள் ஒரு படத்தின் அமைந்ததை அப்படியே காப்பி அடித்துவிடுகிறார்கள். இதை இளையராஜாவும் செய்திருக்கிறாராம்.
அவர் காப்பி அடிக்கும் இசையை பற்றி பல வருடங்களுக்கு முன் மேடையில் பேசியிருக்கிறார். அபூர்வ சகோதர்கள் படத்தில் அமைந்த ஒரு மாப்பிள்ளைக்கு பாடலை நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியை தான் என்ற பாடலை வைத்து காப்பி அடித்துள்ளார் என்பதை அவரே தெரிவித்துள்ளார்.