தலைக்கனத்தில் ஆடிய இளையராஜா.. அவருக்கு இப்படி ஒரு முகம் இருக்கிறதா
இசைஞானி இளையராஜா
இளையராஜா குறித்து பலரும் சர்ச்சைக்குரிய வகையில் கூறியுள்ளனர். சில நிகழ்ச்சிகளின் மேடையில் அவர் நடந்துகொண்ட விதம் பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளது. அதே போல் திரையுலகினரிடம் அவர் தலைக்கனத்தில் நடந்துகொண்ட சில விஷயங்களும் பரவலாக பேசப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இளையராஜா என்றால் இது மட்டுமல்ல, அவர் பலரும் நல்ல விஷயங்களையும் செய்துள்ளார். ஆம், இன்று திரையுலகில் லெஜண்ட் இயக்குனராக பார்க்கப்படும் மணி ரத்னத்தின் ஆரம்பகால வாழ்க்கையில் அவர் இயக்கிய படங்களுக்கு பணம் வாங்காமல் இசையமைத்து கொடுத்துள்ளாராம்.
இளம் இயக்குனர்கள் வளர வேண்டும் என்பதன் காரணமாக அவர் இப்படி செய்துள்ளாராம். அதே போல் இயக்குனர் வேலு பிரபாகரன் இயக்கிய படங்களுக்கு கூட இளையராஜா காசு வாங்காமல் இசையமைத்து கொடுத்துள்ளார். இதை இயக்குனர் வேலு பிரபாகரனே பேட்டியில் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Another Side Of Ilaiyaraja ?❤️ pic.twitter.com/cGRgTRloPM
— Saloon Kada Shanmugam (@saloon_kada) February 22, 2024