கத்ரீனா கைஃபின் அண்ணனுக்கு ரூட்டை போடும் நடிகை? என்ன இப்படி விழுந்துட்டாங்க?

Bollywood Indian Actress Katrina Kaif Ileana D'Cruz
By Edward Jul 18, 2022 05:12 PM GMT
Report

தமிழ் சினிமாவில் கேடி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை இலியானா. இதன்பின் பாலிவுட் வாய்ப்பு கிடைக்க இந்தி, தெலுங்கு படங்களில் நடித்து வந்தார். முன்னணி நடிகையாக கொடிக்கட்டி பறந்து வந்த இலியானா விஜய்யின் நண்பன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார்.

அதன்பின் காதலில் விழுந்து பின் தோல்வியடைந்ததால் படங்களில் கவனம் செலுத்தாமல் பிகினி ஆடையில் நாடு நாடாக சுற்றி வந்தார். இந்நிலையில் பாலிவுட் நடிகை கேத்ரீனா கைஃப் அவரது 39 வது பிறந்த நாளை மாலத்தீவில் தன்னுடைய குடும்பத்தினர் நண்பர்களுடன் கொண்டாடி வருகிறார்.

கொண்டாட்டத்தில் நடிகை இலியானாவும் சென்றுள்ளார். கத்ரீனா கைஃபின் அண்ணன் செபாஸ்டினை இலியானா காதலிப்பதால் தான் அந்த கொண்டாட்டத்திற்கு சென்றிருக்கிறார் என்ற தகவல் பாலிவுட்டில் பரவி வருகிறது. கடந்த 6 மாதங்களாக இருவரும் டேட்டிங்கில் இருந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

அங்கு எடுத்த புகைப்படங்களை கூட இலியானா சமுகவலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.