வளர்ப்பது அம்மா, ஆனா நல்ல அப்பாவாம்!! ஆர்த்தி ரவி யாரை அட்டாக் செய்கிறார்?
ஆர்த்தி ரவி
நடிகர் ரவி மோகன் கடந்த ஆண்டு தான் மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக கூறி விவாகரத்து வழக்கு தொடர்ந்த நிலையில், நீதிமன்றம் அதிரடி உத்தரவை சமீபத்தில் பிறப்பித்து இருந்தது. அதாவது வழக்கு முடியும் வரை மாதம் 3 லட்சம் ஜீவனாம்சமாக ஆர்த்திக்கு கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

ஆர்த்தி தனக்கு ரூ. 40 லட்சம் வேண்டும் என்று கேட்ட நிலையில் நீதிபதி இப்படியொரு உத்தரவிட்டுள்ளார். மேலும் மகன்களை ரவி மோகனை சந்திக்க அனுமதிக்கவும் உத்தரவிட்டுள்ளனர். இது ஒரு பக்கம் இருக்க, இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் ஆர்த்தி, ஹீரோயின்களுக்கே டஃப் கொடுக்கும் வகையிலான போட்டோஷூட் நடத்தி வருகிறார்.
சமீபத்தில் ஆர்த்தி பகிர்ந்த இன்ஸ்டா ஸ்டோரி பலரது கவனத்தை பெற்று வருகிறது.

அதில், தங்கள் குழந்தைகளை உண்மையில் வளர்த்துக் கொண்டிருப்பது அவர்களது அம்மாவாக இருக்கும்போது, நல்ல அப்பா என்று பெருமை பேசிக் கொள்வதை நினைத்து பாருங்கள் என்று குறிப்பிட்டுள்ளார். ரவி மோகன் சர்தார் 2 பட நிகழ்ச்சியில் பேசியப்பின் ஆர்த்தி இந்த பதிவினை பகிர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.