அந்த விசயத்தில் தமன்னாவை ஓரங்கட்டிய நயன்தாரா!! எல்லாம் அந்த சூப்பர் ஸ்டார் நடிகரால் தான்..
இந்திய சினிமாவில் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கு இடையில் தொழில் அளவில் பெரிய போட்டிகள் இருக்கும். நட்சத்திரங்கள் தங்களை மக்கள் எப்போதும் பேச வேண்டும் என்று தங்களின் மார்க்கெட்டை வலுவானதாக வைத்திருப்பார்கள்.
அந்தவகையில் இந்த ஆண்டு அதிகமாக பாப்புலரான இந்திய நட்சத்திரங்களின் லிஸ்ட்டை வெளியிட்டுள்ளனர் IMDB ஊடகம். அந்தவரிசையில் முதல் இடத்தினை பிடித்திருக்கிறார் பாலிவுட் சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர் ஷாருக்கான்.
அவருக்கு அடுத்தபடியாக மாலிவுட் நடிகைகளான ஆலியா பட் 2வது இடமும், தீபிகா படுகோன் 3வது இடமும், வாமிகா கப்பி 4வது இடமும் பிடித்துள்ளனர். பாலிவுட்டில் பல ஆண்டுகளாக பணியாற்றி வரும் நடிகை தமன்னாவை சற்று ஓரங்கட்டி 5வது இடத்தினை பிடித்திருக்கிறார் நடிகை நயன்தாரா.
ஒரேவொரு படத்தில் அறிமுகமாகிய நயன்தாரா பாலிவுட் போனதும் டாப் 5 இடத்திற்குள் இடம்பிடித்திருக்கிறார். அவருக்கு அடுத்து தான் நடிகை தமன்னா 6வது இடத்தினை பிடித்துள்ளார்.
மேலும் நடிகை கரீனா கபூர் கான் 7வது இடமும், சோபிதா 8வது இடமும், அக்ஷய் குமார் 9வது இடமும் பிடித்தனர். டாப் 10வது இடத்தில் நடிகர் விஜய் சேதிபதி பிடித்திருப்பது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்திருக்கிறது. சமீபத்தில் ஜவான் படத்தில் நடித்த 4 சூப்பர் ஸ்டார் நட்சத்திரங்கள் டாப் 10 இடங்களில் பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
The Most Popular Indian Stars who amazed us this year with their performances ?? pic.twitter.com/FsZLlnXiOC
— IMDb India (@IMDb_in) November 23, 2023