பரபரப்பை கிளப்பும் சிவகார்த்திகேயன் - இமான் சண்டை!. முதல் மனைவி கூறிய பகிர் தகவல்

Sivakarthikeyan New Tamil Cinema Tamil Cinema D Imman D. Imman
By Dhiviyarajan Oct 17, 2023 06:30 AM GMT
Report

சிவகார்த்திகேயன் - இமான் கூட்டணியில் வெளிவந்த அனைத்து பாடல்களும் மாபெரும் வெற்றி பெற்று இருக்கிறது. இருவரும் நெருங்கிய நண்பர்களாகவே இருந்து வருகின்றனர்.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட இமான், சிவகார்த்திகேயன் உடன் சேர்ந்து இனி பணியாற்ற மாட்டேன். அவர் எனக்கு துரோகம் செய்துவிட்டார் என்று கூறினார்.

இந்த பிரச்சனை காரணம் இமான் முதல் மனைவி உடன் சிவகார்த்திகேயன் உறவில் இருந்தார், இதனால் இவர்களுக்கு இடையே சண்டை வந்தது போன்று நெட்டிசன்கள் கருத்துக்கள் பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இமான் இரண்டாம் திருமணம் செய்து கொண்ட பிறகு முதல் மனைவி போட்ட பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அதில், இமான் உங்கள் இரண்டாம் திருமணத்திற்கு வாழ்த்து தெரிவித்து கொள்கிறேன். 12 -ம் ஆண்டுகாலம் ஒருவருடன் வாழ்ந்துவிட்டு சுலபமாக நீங்கள் என்ன தூக்கி எரிந்துவிட்டீர்கள்.

நான் ஒரு முட்டாள் இத்தனை ஆண்டு காலம் உங்களுடன் சேர்ந்து என் வாழ்க்கையை வீணாக்கிவிட்டேன். உங்களுடைய சொந்த குழந்தைகளை கூட நீங்கள் சரியாக பார்த்துக்கொள்ளவில்லை.

இப்போது நீங்கள் அவர்களையும் ரீபிளேஸ் செய்துவிட்டீர்கள். நான் என்னுடைய குழந்தைகளை உங்கள் தந்தை இடம் இருந்து பாதுகாத்து கொள்வேன். தேவைப்பட்டால் புதிய குழந்தையும் பாதுகாப்பேன் என்று பதிவிட்டுள்ளார்.