சிவகார்த்திகேயன் - இமான் சர்ச்சை!! ஏ ஆர் ரகுமானின் ரியாக்ஷன் இதுதான்.. உண்மையை கூறிய பிரபலம்
கடந்த சினிமா மாதங்களாக பெரிய விசயமாக பேசப்பட்டு சர்ச்சைக்குள்ளான விசயம் இமான் - சிவகார்த்திகேயன் பிரச்சனை தான். இமான் மற்றும் மோனிகா விவாகரத்து விசயமாக சிவகார்த்திகேயன் பெயர் அடிப்பட்டது. சிவகார்த்திகேயன் எனக்கு துரோகம் செய்துவிட்டார், அவருடன் இந்த ஜென்மத்தில் இணையப்போவதில்லை என்று கூறினார்.
இதற்கு சினிமா விமர்சகர்கள் அதை நேரில் பார்த்தேன் என்றும் சிவகார்த்திகேயன் பேசிய ஆபாச ஆடியோக்கள் இருப்பதாகவும் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினர். இதுகுறித்து சிவகார்த்திகேயன் மெளனமாக இருந்து எதற்கு பதிலளிக்காமல் இருந்து வந்தார். இன்று நடைபெறும் அயலான் படத்தின் ஆடியோ லான்ச் மூலம் மெளனம் கலைத்து பதிலடி கொடுப்பார் எனவும் எதிர்ப்பார்த்து வருகிறார்கள்.
இந்நிலையில் இமான் - சிவகார்த்திகேயன் விசயத்தில் ஏ ஆர் ரகுமான் எதுவும் பேசி இருக்கமாட்டார் என்று தோன்றுவதாக பத்திரிக்கையாளர் பிஸ்மி தெரிவித்துள்ளார். அயலான் படத்தின் இசை வேலைக்காக அவரது ஸ்டுடியோவில் சிவகார்த்திகேயன் இருப்பது போல் புகைப்படம் வெளியானதை பார்த்தேன்.
அப்போது அவரிடம் இதெல்லாம் உண்மையா என்று ரகுமான் கேட்டிருக்கலாம், அதற்கு சிவகார்த்திகேயனோ வழக்கம் போல் இல்லை, அது பொய், திட்டமிட்டே பேசுகிறார்கள் என்று சொல்லி இருக்கலாம். ஏ ஆர் ரகுமான் கேள்விப்பட்ட செய்தியை நம்புவாரா? சிவகார்த்திகேயன் சொல்வதை நம்புவாரா? என்றால் சிவகார்த்திகேயன் சொல்வதை நம்புவார்.
பாடகி ஒருவர் வைரமுத்து மீது கொடுத்த குற்றச்சாட்டை நம்பி அதிலிருந்து வைரமுத்துவை தன் இசையில் எழுதவிடவில்லை. அப்படிப்பட்டவர், சிவகார்த்திகேயன் - இமான் பிரச்சனையை தீர விசாரித்து வைரமுத்து விவகாரத்தில் எப்படி நடந்தாரோ அப்படித்தான் நடந்திருக்க வேண்டும். என்னை பொறுத்தவரை ஏ ஆர் ரகுமான் நடந்து கொண்டது சரியான முடிவு இல்லை என்று தான் சொல்வேன் என்று பிஸ்மி தெரிவித்துள்ளார்.