மறுத்து ஒதுக்கிய மனைவி!! லதாவை ரஜினிகாந்த் மயக்கி திருமணம் செய்தது இப்படித்தானாம்!!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆரம்பக்கட்ட சினிமா வாழ்க்கையில் லதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது ரஜினிகாந்த் எப்படி லதாவை மயக்கி திருமணம் செய்தார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. சூப்பர் ஸ்டாராக வளர்ந்து வரும் காலக்கட்டம் அது.
அந்நிலையில் லதா எத்திராஜ் கல்லூரியில் ஆங்கில இலக்கியம் படித்துக்கொண்டிருக்கும் போது அங்கு சென்றிருக்கிறார் ரஜினிகாந்த். அவரை பேட்டி எடுக்க வேண்டும் என்று லதாவை அனுப்பி வைத்தனர்.

அப்போது முதல் பார்வையிலேயே லதாவின் அழகில் விழுந்த ரஜினிகாந்த் கல்யாணம் செய்து கொள்கிறாயா என்று உடனே கேட்டாராம். அதனால் திணறிப்போன லதா எங்கள் வீட்டில் ஒத்துக்கொள்ளமாட்டார்கள் என்று கூறிவிட்டு கிளம்பி இருக்கிறார்.
அதன்பின் ரஜினிகாந்தின் வாழ்க்கையை அறிந்து கொண்ட லதா, சூப்பர் ஸ்டாருக்கு நரம்பியல் பிரச்சனை இருப்பது தெரிந்தும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்திருக்கிறார்.
அதற்கு காரணம் ரஜினிகாந்த் ஆரம்பத்தில் இருந்து அண்ணனின் அரவணைப்பில் வளர்ந்து அம்மா பாசத்திற்காக ஏங்கி இருக்கிறார் என்ற காரணம் தான்.

அப்படி 1981ல் திருப்பதி கோவிலில் லதா கண்மூடிய சமயத்தில் ரஜினிகாந்த் தாலியை கழுத்தில் கட்டியிருக்கிறார். அதிலிருந்து ரஜினிகாந்த் வாழ்க்கையில் அனைத்திலும் சாதித்து வந்துள்ளராம். சூப்பர் ஸ்டார் ஆன்மீகத்தை தேடியதும் லதா ஒரு காரணமாக இருந்துள்ளார்.