படுமோசமான பவுலிங் பார்ம்.. இந்தியாவை ஓடஓட விரட்டி அடித்த இங்கிலாந்து..
உலக கோப்பை டி20 போட்டியின் அரையிறுதியின் இரண்டாம் போட்டி இன்று ஆஸ்திரேலியாவில் அடிலெய்டு மைதானத்தில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதல் பவுலிங் தேர்வு செய்தது.
முதல் பேட்டிங்கை ஆடிய இந்திய அணி கடுமையாக போராடி 169 ரன்களை இங்கிலாந்துக்கு நிர்ணயம் செய்தது. இதைதொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணியின் முதலில் இறங்கிய ஜோஸ் பட்லர் மற்றும் ஹேல்ஸ் இந்திய பவுலர்களின் பந்தை நான்கு புறங்களிலும் விளாசி வீசி அடித்தனர்.
விறுவிறுப்பாக செல்ல வேண்டிய போட்டியை இந்திய பவுலர்கள் 16 ஓவர்களிலேயே ரன்களை விட்டுக்கொடுத்து டஃப் கொடுக்கக்கூட தவறவிட்டனர். இதனால் இங்கிலாந்து அணி படுகேவலமாக 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை தோல்வியடையச் செய்தது.
இப்படியொரு தோல்வியை நாங்கள் பார்த்ததில்லை என்று இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் இந்திய அணியின் வீரர்களை கடுமையாக திட்டியும் விமர்சித்தும் கருத்துக்களை கூறி வருகிறார்கள்.
வரும் 13 ஆம் தேதி ஞாயிற்று கிழமை இங்கிலாந்து அணி பாகிஸ்தான் அணியை இறுதி போட்டியில் மோதவிருக்கிறது. பல ஆண்டுகள் கழித்து உலக கோப்பை டி20 போட்டியில் இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளது.
I N D I A ?pic.twitter.com/uRnh6o8uZR
— Saloon Kada Shanmugam (@saloon_kada) November 10, 2022