நடிகை ஹனி ரோஸிடம் எல்லைமீறிய ரசிகர்கள்!! கடைத்திறப்பு விழாவில் நடந்த சம்பவம்..
ஹனி ரோஸ்
மலையாள மொழிப்படங்களில் நடித்து பிரபலமாகி, தமிழில் 2007ல் வெளியான முதல் கனவே என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகி பிரபலமானவர் தான் நடிகை ஹனி ரோஸ். இதன்பின் சிங்கம் புலி, கந்தர்வம், பட்டாம்பூச்சி உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.

தமிழ், மலையாளம் தெலுங்கு, கன்னடம் மொழிகளில் நடித்து பிரபலமான நடிகை ஹனி ரோஸ், சமீபகாலமாக கடைத்திறப்பு நிகழ்ச்சிகளுக்கு சென்று வருகிறார்.
கடைத்திறப்பு விழாவில்
அப்படி சமீபத்தில் நடந்த கடைத்திறப்பு விழாவின் போது, அவருக்கு ரசிகர்களால் நடந்த அசம்பாவிதம் தான் தற்போது பேசுபொருளாக மாறியிருக்கிறது. கோழிக்கோடு நகைக்கடை திறப்புவிழாவின் போது, நடிகை ஹனி ரோஸை பார்க்க ரசிகர்கள் கூட்டம் சூழ்ந்தனர்.

இதனால் பெரியளவில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதற்கிடையில் செல்ஃபி எடுக்கும்போது ஒரு சிலர் அவரிடம் அநாகரீகமாக நடந்து கொண்டிருக்கிறார்கள். ஒருவர் நடிகையின் இடுப்பில் கையை வைத்து செல்ஃபி எடுத்துள்ளார்.
ரசிகர்கள் இந்த செயலால் சங்கடப்பட்டாலும் பொது இடம் என்பதால் ஹனி ரோஸ் அமைதியாக சென்றுள்ளார். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.
