சமந்தா முதல் பிரியங்கா சோப்ராவை!! டாப் இந்திய நடிகைகளின் முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Keerthy Suresh Samantha Alia Bhatt Indian Actress Priyanka Chopra
By Edward Feb 17, 2025 02:30 PM GMT
Report

சினிமாவில் நடிக்கும் நட்சத்திரங்கள் என்று சொன்னேலே அனைவருக்கும் முதலில் ஞாபகம் வருவது அவர்களின் சம்பளம் தான். மற்ற துறைகளை காட்டிலும் சினிமாத்துறையில் இருக்கும் நட்சத்திரங்களுக்கு சம்பளம் அதிகம்.

அதிலும் நடிகர்கள் 100 கோடிக்கும் மேல் வரை சம்பளம் வாங்கி வாய் பிளக்க வைப்பார்கள். ஆனால் நடிகைகள் டாப் நடிகையாக இருந்தாலும் 30 கோடியை தாண்டி யாரும் வாங்குவதில்லை. அந்தவகையில், இந்தியாவில் ஸ்டார் நடிகைகளாக இருக்கும் நடிகைகளின் முதல் சம்பளம் என்ன என்பதை பார்ப்போம்.

சமந்தா முதல் பிரியங்கா சோப்ராவை!! டாப் இந்திய நடிகைகளின் முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா? | Indian Actresses First Salary List Samantha Alia

நடிகைகளின் முதல் சம்பளம்

டாப் இந்திய நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை ஆலியா பட் 15 லட்சம் தான் முதலில் சம்பளம் வாங்கியிருக்கிறார். தற்போது அது 15 கோடிக்கும் மேல் சம்பளம் பெறுகிறார்.

பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகை தீபிகா படுகோனேவின் முதல் சம்பளம் 2000 ரூபாயாம்.

தென்னிந்தியாவை தாண்டி பாலிவுட் பக்கம் சென்றுள்ள நடிகை சமந்தாவின் முதல் சம்பளம் 500 ரூபாய். தற்போது 5 கோடி முதல் 7 கோடி வரை சம்பளமாக பெறுகிறார்.

நடிகை பிரியா மணி முதல் படத்திற்கு 500 ரூபாய் சம்பளம் வாங்கினாராம்.

நடிகை கீர்த்தி சுரேஷ் பேஷன் நிகழ்ச்சியில் 500 சம்பளமாக முதலில் பெற்றுள்ளார். தற்போது 3 முதல் 4 கோடி வரை சம்பளம் பெற்று வருகிறார்.

பாலிவுட்டை தாண்டி ஹாலிவுட் பக்கம் சென்று ஜொலிக்கும் நடிகை பிரியங்கா சோப்ராவின் முதல் சம்பளம் 5000 ரூபாயாம். தற்போது 15 முதல் 25 கோடி வரை சம்பளமாக பெற்று வருகிறாராம்.