உடல் ஒல்லியாக ஆள் அடையாளம் தெரியாமல் மாறிப்போன மைனா நந்தினி - யோகேஷ்..

Myna Nandhini Viral Photos Tamil Actress Actress
By Jai Mar 14, 2026 01:30 PM GMT
Report

மைனா நந்தினி - யோகேஷ்

விஜய் டிவியில் ஒளிப்பரப்பான சரவணன் மீனாட்சி 2 சீரியலில் மைனா என்ற ரோலில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை நந்தினி. இந்த சீரியலுக்குப்பின் அடுத்தடுத்த சீரியல்களில் நடித்து வந்த நந்தினி, சினிமா படங்களிலும் சீரியல்களிலும் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு பிரபலமானார்.

உடல் ஒல்லியாக ஆள் அடையாளம் தெரியாமல் மாறிப்போன மைனா நந்தினி - யோகேஷ்.. | Myna Nandhini Recent Shocking Photos Fans Reaction

பிக்பாஸ் சீசன் 6ல் போட்டியாளராக கலந்து கொண்டு 103 நாட்கள் வீட்டில் இருந்து பின் வெளியேறினார். தற்போது தன்னுடைய கணவர் லோகேஷ்வரனுடன் கில்லாடி ஜோடிஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வருகிறார்.

சமீபத்தில் தன்னுடைய சகோதரர் திருமணத்தை பிரமாண்டமான முறையில் நடத்தி முடித்தார். இந்நிலையில் மைனா நந்தினியும் அவரது கணவரும் உடல் எடையை குறைத்து படுஒல்லியாக மாறியுள்ளனர்.

கோவிலுக்கு சென்று எடுத்த அவர்கள் புகைப்படத்தை பார்த்த பலரும் என்ன ஆச்சு உங்களுக்கு என்று கேள்விகளை கேட்டு வருகிறார்கள்.