வடிவேலு பேசப்பேச திமுக அழிந்துபோகும்!! காட்டமாக பேசிய செல்லூர் ராஜு..
செல்லூர் ராஜு
அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில், NDA கூட்டணியில் விஜய் வந்தால் கூட்டணி வலு பெருமா? என்று கேட்கிறீர்கள்.
மக்கள் கூட்டணியை வைத்து வாக்களிப்பவர்கள் கிடையாது, ஒரு ஆட்சியின் நன்மை தீமைகளை ஆராய்வார்கள். நான் நல்லது செய்தால் தான் மக்கள் ஓட்டு எனக்கு போடுவார்கள். இல்லையென்றால் செல்லூர் ராஜு கிளம்பி போ என்று சொல்லிவிடுவார்கள்.
திமுக அழிந்துபோகும்
திமுகவை அழிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இருக்கும் இடம் தெரியாமல் போய்விடுவார்கள் என்று வடிவேலு செல்கிறார். வைகைப்புயல் வடிவேலு பேசட்டும், அவர் பேச பேச திமுக அழிந்துபோகும். 2011ல் வடிவேலு புயலாக கிளம்பினார். குஷ்பூ ஒரு பக்கம் அவர் ஒரு பக்கம் புறப்பட்டார், பார்த்தால் என் தொகுதியில் வந்து பேசினார்.
ஜெயந்திபுரத்தில் பெரிய கூட்டம் இருந்தது. நானே அவ்வளவுதான் என்று நினைத்தேன். அப்புறம் தான் தெரிந்தது வைகைப்புயலின் ராசி அப்படி என்று, வடிவேலுக்கு உள் மனதில் திமுக வரக்கூடாது என்று இருக்கும் என்று செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.