2 மனைவிகள்..6 குழந்தைகள்..13 பேரப்பிள்ளைகள்!! தர்மேந்திராவின் குடும்பம்...
தர்மேந்திரா
பாலிவுட் சினிமாவின் பழம்பெரும் நடிகர் தர்மேந்திரா. கடந்த சில நாட்களாக அவரது உடல்நிலை மோசமாக இருந்ததால் மும்பையில் உள்ள பிரீச் கேண்டி தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். தர்மேந்திரா உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் அவர் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருவதாகவும் செய்திகள் வெளியான நிலையில் சில நாட்களுக்கு முன் அவர் இறந்துவிட்டதாக வதந்தி செய்திகள் பரவியது.

தற்போது தன் கணவர் நலமுடன் இருக்கிறார் என்று 2வது மனைவி ஹேமமாலினி அறிவித்த நிலையில், சிகிச்சை பெற்று தர்மேந்திரா டிஸ்ஜார்ஸ் செய்யபட்டு வீட்டுக்கு சென்றுவிட்டார். பாலிவுட் சினிமாவில் மிகப்பெரிய குடும்பங்களில் ஒன்று தான் தர்மேந்திராவின் குடும்பம், 1935ல் பஞ்சாபில் பிறந்த தர்மேந்திரா, 19 வயதில் பிரகாஷ் கவுர் என்பவரை திருமணம் செய்து 4 குழந்தைகளை பெற்றார்.
6 குழந்தைகள் - 13 பேரப்பிள்ளைகள்
சன்னி தியோல், பாபி தியோ, விஜேதா தியோல், அஜிதா தியோல் என்ற 4 பேர் தான் அவர்கள். திருமணமாகி குழந்தைப்பெற்ற பின் தான் சினிமாவில் அறிமுகமாகினார்.
1970 - 80களில் டாப் நட்சத்திரமாக மாறினார். 1980ல் நடிகை ஹேமமாலினியை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 3 குழந்தைகள் பிறந்தன. தர்மேந்திராவுக்கு 6 குழந்தைகள் என 13 பேரப்பிள்ளைகள் பிறந்துள்ளது.

தர்மேந்திராவின் மகன் சன்னி தியோல், பாலிவுட்டின் பிரபல நடிகர். ஆங்கிலோ இந்திய குடும்பத்தை சேர்ந்த பூஜா தியோலை மணந்து, கரண் மற்றும் ராஜ்வீர் என்ற இரு மகன்களை பெற்றெடுத்தார்.
தர்மேந்திராவின் மகன் பாபி தியோல், தான்யா அஹுஜா தியோல் என்ற தொழிலதிபரை மணந்து ஆர்யமான், தரம் என்ற இரு மகன்களை பெற்றனர்.

தர்மேந்திராவின் இளைய மகள் அஜிதா தியோல், அமெரிக்காவின் கலிபோர்னியாவில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அவருக்கு நிகிதா, பிரியங்கா என இரு மகள்கள் உள்ளனர்.
தர்மேந்திராவின் மற்றொரு மகள் விஜேதா தியோ, விவேக் கில் என்பவரை மணந்து சாஹில் என்ற மகனையும் பிரேர்னா என்ற மகளை பெற்றெடுத்தார்.
தர்மேந்திரா - ஹேம மாலினிக்கு பிறந்தவர்கள் தான் ஈஷா தியோல், அஹானா தியோல்.