இந்தியாவின் அதிக சம்பளம் வாங்கும் நடிகர் இவர்தானா? வெளியான தகவல்..
இந்திய சினிமாவின் ஹீரோக்களின் மார்க்கெட்டுக்கு ஏற்ப பட்ஜெட்டும் அதன் வசூலின் கணிக்கப்படும். அப்படி இந்திய திரையுலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களின் பட்டியல் எப்போது ரசிகர்களிடையேயும், சினிமா வர்த்தக நிபுணர்களிடையேயும் பெரும் வியப்பை ஏற்படுத்தும்.

புஷ்பா 2
1990களில் நடிகர் சிரஞ்சீவி முதன்முதலான ஒரு படத்திற்கு ரூ. 1 கோடி சம்பளமாக பெற்று அதிக சம்பளம் வாங்கும் நடிகராக இருந்தார். பல ஆண்டுகளாக பாலிவுட் நடிகர்களே இதில் ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில் தற்போது தென்னிந்தியாவில் பான் - இந்திய வளர்ச்சி இந்த எல்லையை மாற்றியுள்ளது.
அந்தவகையில் பாலிவுட் சூப்பர் ஸ்டார்களையும் முந்தி உலகிலேயே அதிக சம்பளம் வாங்கும் இந்திய நடிகராக தெலுங்கு திரையுலகின் ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் உருவெடுத்துள்ளார்.
2024ல் வெளியான புஷ்பா 2 படத்தின் பிரமாண்ட வெற்றியே இதற்கு காரணம். இப்படத்திற்காக அல்லு அர்ஜுன் குறிப்பிட்ட தொகையை முன்பணமாக பெற்றதோடு, படத்தின் லாபத்தின் ஒரு பங்கை இப்பந்தம் செய்தார். அப்படி புஷ்பா 2 படத்தின் உலகளவில் வசூல் ரூ. 1700 கோடிக்கும் மேல் பெற்றிருந்ததால் சுமார் ரூ. 600 கோடிக்கும் அதிகமான லாபத்தை ஈட்டியது.

இதில் அல்லு அர்ஜுனுக்கு கிடைத்த லாபத்தின் பங்கை சேர்த்து ஒட்டுமொத்த வருமானம் ரூ. 300 கோடி அல்லது அதற்கு மேல் இருக்கும் என்று வர்த்தக வட்டாரங்கள் கூறுகின்றன. இந்திய சினிமாவின் பிரமாண்ட அடையாளமாக பாகுபலி 2 படத்தின் ஒட்டுமொத்த பட்ஜெட்டை விட இது அதிகம்.
நீண்டகாலமாக ஷாருக்கான், சல்மான் கான், அமீர்கான் ஆகியோரே ரூ. 100 கோடிக்கும் மேல் சம்பளம் வாங்கி டாப் இடத்தில் இருந்தனர். 2023ல் ஷாருக்கான் பதான், ஜவான் படங்களில் தன்னுடைய வருவாயை ரூ. 200 கோடியாக உயர்த்தினார். கடந்த 5 ஆண்டுகளில் புஷ்பா 2 படத்தில் மட்டுமே அல்லு அர்ஜுன் நடித்துள்ளார்.
அடுத்து இயக்குநர் அட்லீ இயக்கத்தில் இணைந்து ராகா படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். பிரமாண்டமாக உருவாகவுள்ள இப்படம் 2027ல் வெளியாகவுள்ள நிலையில், கிட்டத்தட்ட ரூ. 2000 கோடி வசூலை பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டு வருகிறது.