அம்பானியின் 15 ஆயிரம் கோடி ஆண்டிலியாவை விட விலையுயர்ந்த மாளிகை!! எத்தனை கோடி தெரியுமா?
ஆண்டிலியா
உலகளவில் டாப் பணக்காரர்களில் ஒருவராக இருக்கும் முகேஷ் அம்பானியின் பிரமாண்ட வீடு 15 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது. அவரின் அந்த பங்களா தான் விலையுயர்ந்த கட்டிடமாக கருதப்பட்டு வருகிறது. ஆனால் ஆண்டிலியா வீட்டைவிடு பல படங்கு விலையுயர்ந்த மாளிகையை ஒரு அரச குடும்பத்தினர் வைத்திருப்பது வியக்க வைத்துள்ளது.
லட்சுமி விலாஸ் அரண்மனை
பக்கிங்ஹாம் அரண்மனையைவிட 4 மடங்கு பெரிய அரண்மனை இந்தியாவில் தான் இருக்கிறது. குஜராத்தின் வதோதராவில் உள்ள லட்சுமி விலாஸ் அரண்மனை. இது ஜெய்க்வாட் அரச குடும்பத்திற்கு சொந்தமானதாகும். இந்த அரண்மனையில் அரச குடும்பத்தின் தலைவர் சமர்ஜித் சிங் கெய்க்வாட் தனது மனைவி ராதிகா ராஜே மற்றும் குடும்பத்தினருடன் 2013 முதல் வசித்து வருகிறார்கள். அவரது மனைவி அரண்மனையின் உரிமையாளராக இருக்கிறார்.
சமர்ஜித் சிங் கெய்க்வாட், மகாராஜா ரஞ்சித் சிங் பிரதாப் - சுபாங்கினி ராஜேவின் ஒரே மகன். முன்னாள் கிரிக்கெட் வீரராகவும் இருந்திருக்கிறார். 1875ல் லட்சுமி விலாஸ் அரண்மனை கட்டப்பட்டு விலையுயர்ந்த மற்றும் ஆடம்பரமான அரணமனைகளில் ஒன்றாக கருதப்பட்டு வருகிறது.
700 ஏக்கரில் கட்டப்பட்ட இந்த அரண்மனையை கட்ட 12 ஆண்டுகளானதாம். லட்சுமி விலாஸ் அரணமனையில் ஒரு பக்கம் அரச குடும்பம் வசித்து வருகிறார்கள். மற்றொரு பக்கம் மக்கள் சென்று அரண்மனையை பார்க்க அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. 170 அறைகள் கொண்ட இந்த அரண்மனை 3,04,92,000 சதுர அடியில் கட்டப்பட்டுள்ளது.
இதை சார்லஸ் ஃபெல்லோ சிஷோல்ம் என்பவர் உருவாக்கினார். இந்த அரண்மனையை கட்ட 18,000 பிரிட்டிஷ் பவுண்டுகளானதாம். சுமார் 60 லட்சம் ரூபாய் செலவாகியிருக்கிறது. லட்சுமி விலாஸ் அரண்மனையின் தற்போதைய மதிப்பு 2,43,93,60,00,000 ரூபாயாம். அதாவது 24 ஆயிரம் கோடிக்கும் மேல்.