குறி வெச்சா இரை விழணும்!! 7 விக்கெட்டை எடுத்து நியூசிலாந்தை சிதறியடித்த வாஷிங்டன் சுந்தர்..

Ravichandran Ashwin Rohit Sharma Indian Cricket Team New Zealand Cricket Team Washington Sundar
By Edward Oct 24, 2024 11:30 AM GMT
Edward

Edward

in Cricket
Report

இந்திய அணி - நியூசிலாந்து

இந்திய அணி தற்போது நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளை இந்திய மண்ணில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட்டில் நியூசிலாந்து அணியின் சிறப்பான பந்துவீச்சு மற்றும் பேட்டிங்கால், இந்திய அணி தோல்வியை தழுவியது.

இதனை தொடர்ந்து இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று புனேவில் முதல் நாள் ஆட்டம் துவங்கியது. பேட்டிங்கை தேர்வு செய்த நியூசிலாந்து அணியினர் ஆரம்பத்தில் நிதானமாக ஆடி வந்தனர்.

குறி வெச்சா இரை விழணும்!! 7 விக்கெட்டை எடுத்து நியூசிலாந்தை சிதறியடித்த வாஷிங்டன் சுந்தர்.. | Indvsnz 2Nd Test Washington Sundar Take 7 Wicket

அதன்பின் அஷ்வின் அடுத்தடுத்த மூன்று விக்கெட்டுகளை எடுக்க அவருடன் இணைந்து வாஷிங்டன் சுந்தரும் தன்னுடைய சுழல் பந்தை போட ஆரம்பித்தார்.

வாஷிங்டன் 7 விக்கெட்

வாஷ்ங்டன் போட்ட முதல் ஓவரிலேயே ரச்சின் ரவிந்திரா விக்கெட்டை பறிகொடுத்தார். அதன்பின் சிறப்பாக பந்துவீசிய வாஷிங்டன் ஓவரில் அடுத்தடுத்து விக்கெட்டுக்களை பறிக்கொடுத்த நீயூசிலாந்து அணியினர் 259க்கு ஆல் அவுட்டாகியது.

குறி வெச்சா இரை விழணும்!! 7 விக்கெட்டை எடுத்து நியூசிலாந்தை சிதறியடித்த வாஷிங்டன் சுந்தர்.. | Indvsnz 2Nd Test Washington Sundar Take 7 Wicket

இதில் வாஷிங்டன் சுந்தர் 7 விக்கெட்டுகளும் அஷ்வின் 3 விக்கெட்டுக்களும் எடுத்துள்ளனர். இதில் பந்துவீசு 10 விக்கெட்டுக்களை எடுத்ததே நம் தமிழ் நாட்டை சேர்ந்த வீரர்கள் என்று இருவரையும் பாராட்டியபடி இணையத்தில் ரசிகர்கள் கருத்துக்களை கூறி வருகிறார்கள்.

Gallery