பெண்களை இப்படி கொச்சைப்படுத்தி ஒரு விளம்பரமா? வீடியோவை பார்த்து வலுக்கு எதிர்ப்புகள்..
இந்தியாவில் பெண்களுக்கு என பாதுகாப்பு குறைவாக இருப்பதாகவும் பல பலாத்கார சம்பவங்கள் தலைவிரிடத்து ஆடுகிறது என்றும் கூறப்படுகிறது. பல இடங்களில் பெண்களுக்கு ஏற்படும் கொடுமைகளுக்காக நீதி கேட்டு போரட்டங்களும் நடிபெற்று வருகிறது.
இதற்கு முக்கிய காரணமாக இருப்பது பெண்களை கேலிக்கூத்தாக்கும் சில விளம்பரங்கள் தான். அப்படி சமீபகாலங்களில் ஒரு பொருளை விற்பனை செய்ய விளம்பரம் அதிகளவில் தேவைப்படும். அப்படி எல்லைமீறிய ஆடை அணிந்தும் நெருக்கமாக நடித்து வெளியாகும் விளம்பரங்களும் தான்.
அந்தவகையில் சமீபத்தில் ஒரு பெர்ஃயூம் விளம்பர வீடியோ பெண்களை கொச்சைப்படுத்தும் வகையில் இருப்பதாக எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. ஒரு டிபார்ட்மென்டல் ஸ்டோரில் நான்கு இளைஞர்கள் ஒரு பெண்ணை பின் தொடர்ந்து செல்கின்றனர்.
நாம் நான்கு பேர் இருக்கிறோம் இங்கு ஒன்றுதான் இருக்கிறது என்று அவர்கள் இரு பொருள்பட பேசுவதை கேட்டு அந்தப் பெண் அதிர்ந்து போகிறார். பின்பு தான் தெரிகிறது அந்த இளைஞர்கள் குறிப்பிட்ட ஒரு கம்பெனியின் பெர்ஃப்யூமை பற்றி பேசி பேசியுள்ளது.
இப்படியான ஒருசில விளம்பரங்கள் மூலம் பெண்களை ஏன் கேவலப்படுத்துகிறீர்கள் என்று கூறி இணையத்தில் திட்டித்தீர்த்தும் வருகிறார்கள்.
Why is India the rape capital of the world and most unsafe country for a woman! An advert romanticizing gang rape. pic.twitter.com/jD6K3CjJeQ
— Ashok Swain (@ashoswai) June 4, 2022