பெரிய இடத்தில் கொடுக்கும் மிரட்டல்.. நான்று பக்கமும் அடிவாங்கப்போகும் சிவகார்த்திகேயன்.. ஒரே வழிதான்!!

Karthi Sivakarthikeyan Prince (2022) Sardar
By Edward Oct 17, 2022 10:11 AM GMT
Report

தமிழ் சினிமாவில் குறுகிய காலக்கட்டத்தில் முன்னணி நடிகராகவும் 20 கோடிக்கும் மேல் சம்பளம் வாங்கும் நடிகராகவும் திகழ்ந்து வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். டாக்டர், டான் படத்தின் 100 கோடி வசூல் சாதனை தொடர்ந்து இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் பிரின்ஸ் படத்தில் நடித்துள்ளார்.

தீபாவளி அன்று வெளியாகவுள்ள இப்படத்திற்கு போட்டியாக நடிகர் கார்த்தி நடிப்பில் சர்தார் படமும் வெளியாகவுள்ளது. ஒரே நேரத்தில் இரு படங்கள் வெளியாகியாகினாலும், சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படத்திற்கு மட்டும் காலை 5 மணி காட்சிகள் ஒளிப்பரப்பாகவுள்ளது.

ஆனால், இப்படத்தின் வெளியீட்டு உரிமையை சுரேஷ் பிரடொக்ஷன் பார்க்கவுள்ள நிலையில் சர்தார் படத்தினை மட்டும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிடவுள்ளது. இதனால் பிரின்ஸ் படத்திற்காக திரையரங்கு உரிமையாளர்களிடம் அதிக காட்சிகளை கொடுக்கக்கூடாது என்று சொல்லியுள்ளார்களாம்.

அதிக திரையரங்குகளோ காட்சிகளோ பிரின்ஸ் படத்திற்கு கொடுத்தால் சர்தார் படத்திற்கான வசூல் குறைந்துவிடும் என்பதற்காக ரெட் ஜெயன்ட் கூறி வருகிறார்கள்.

அதை மீறி செய்தால் பெரிய படத்தின் வாய்ப்புகள் உங்களுக்கு வழங்கப்படாது என்ற்ம் தெரிவித்து மிரட்டி வருகிறார்களாம்.

இதனால் முதல் நாள் வசூலில் சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படம் சிக்கலில் இருந்து வருகிறதாம்.