நேத்து வந்த சின்ன பையனுக்காக குட்டி தல வேண்டாமா? தோனிக்கு வந்த சிக்கல்

இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டி துபாய், அபுதாபி போன்ற இடங்களில் கொரோனா காரணமாக நடைபெற்றது. இரு பகுதிகளாக நடைபெற்ற ஐபிஎல் டைட்டிலை தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கைப்பற்றியது.

அடுத்த ஆண்டு இந்தியாவில் தான் நடக்கும் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் லக்னோ, அகமதாபாத் போன்ற இரு புதிய அணிகள் அறிமுகமாகவுள்ளது. அதன்படி அதற்கான 2022க்கான ரீ டெயின் லிஸ்ட் பட்டியல் வெளியாகியுள்ளது. அதில் சென்னை அணியில் இருந்து யார் யார் வெளியேற்றி யாரை தக்கவைத்து கொள்கிறார்கள் என்ற லிஸ்ட்டும் வெளியாகியுள்ளது.

ஒரு அணியினர் 4 வீரர்களை தேர்வு செய்து ரீ டெயின் செய்யமுடியும். அப்படி சென்னை அணியில் அடுத்த ஆண்டு சென்னையில் தான் என் கடைசி ஆட்டம் என்று கூறிய கேப்டன் தோனியை 3 சீசன்களுக்கு தக்கவைத்துள்ளதாம்.

மேலும் ஜடேஜா, ருத்துராஜ், மோயின் அலி அல்லது சாம் கரணை சிஎஸ்கே அணி ரீ டெயின் செய்யபோகிறதாம். இதற்கு நெட்டிசன்கள் இப்போ வந்த சின்ன பையனுக்காக சின்னதல ரெய்னாவையா தூக்கி போடுறீங்க என்று புலம்பி வருகிறார்கள்.

உலகின் அனைத்துப் பாகங்களிலும் இடம் பெறும் வெளிநாட்டு - உள்நாட்டு அரசியல், சினிமா மற்றும் பொருளாதாரத்தை உடனுக்குடன் அறிந்து கொள்ள லங்காசிறிக் குழுமத்துடன் இணைந்திருங்கள்