ராஷ்மிகா மந்தனாவின் திருமணம் எப்போது? வெளிவந்த தேதி விவரம்
நடிகை ராஷ்மிகா மந்தனா இந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கிறார். இவர் பிரபல நடிகர் விஜய் தேவரகொண்டாவை காதலித்து வருவதை ரசிகர்கள் அனைவரும் அறிந்தாலும், இவர்கள் இருவரும் இதுகுறித்து எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை.

ஆனால், கடந்த சில மாதங்களுக்கு முன் இவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றதாக கிசுகிசுக்கப்படுகிறது. நிச்சயதார்த்த மோதிரத்தை ராஷ்மிகா தனது கையில் அணிந்துள்ளார் என கூறி சில புகைப்படங்கள் கூட இணையத்தில் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், இவர்களின் திருமண தேதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, வருகிற 2026ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 26ஆம் தேதி ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டா திருமணம் நடக்கவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவர்களின் திருமணம் உதய்பூரில் உள்ள மாளிகையில் மிகவும் பிரம்மாண்டமாக நடக்கப்போவதாக தெரியவந்துள்ளது. ஆனால், இது அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை, இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வரும் தகவல் ஆகும்.