முன்பதிவில் அசத்தும் ஜனநாயகன்.. இதுவரை எவ்வளவு வசூல் தெரியுமா?
Vijay
JanaNayagan
By Kathick
விஜய் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் ஜனநாயகன் படம் வருகிற ஜனவரி 9ஆம் தேதி வெளியாகிறது. விஜய்யின் கடைசி படம் என்பதால் இப்படத்தை கொண்டாடி தீர்க்க ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் ஜனநாயகன் படத்தை இயக்குநர் ஹெச். வினோத் இயக்க, பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பிரியாமணி, பாபி தியோல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இதுவரை வெளிவந்த பாடல்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. விஜய்யின் படங்களுக்கு ப்ரீ புக்கிங் தொடங்கினால் வசூல் மழை பொழியும். அதுவும் கடைசி படம் என்றால் சொல்லவே தேவையில்லை.

இந்த நிலையில், இதுவரை ஜனநாயகன் முன்பதிவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் இதுவரை உலகளவில் ரூ. 12+ கோடி வசூல் செய்துள்ளது.