இனிமேல் இங்கையும் விஜய்யின் ஆட்டம் தான்!!
தமிழ் சினிமாவில் மாஸ் நடிகராகவும் 100 கோடி சம்பளம் வாங்கும் தென்னிந்திய நடிகராகவும் திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய். தற்போது லியோ படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருந்து வருகிறார். விஜய்க்கென்றே தனித்துவமான ஒரு ஸ்டைல்-ஐ அவர் நடிக்கும் படத்தில் வைத்துவிடுவார்கள்.
அப்படி இயக்குனர் அட்லீ இயக்கத்தில் வெளியான மெர்சல் படத்தில் விஜய்யின் பிரபல போஸ்-ஆக இரு கைகளை தூக்கி காட்டுவார். அந்த போஸ் அடுத்தடுத்து வந்த படங்களில் விஜய்யின் சிம்பிளாகவே மாறிவிட்டது.
இந்நிலையில் விஜய்யின் அந்த மாஸ் போஸ்-ஐ ஐபிஎல் போட்டியில் இம்பேக் பிளேயர் விதியாக மாற்றியிருக்கிறது கிரிக்கெட் வாரியம்.
அதாவது போட்டியில் ஆடும் ஒரு அணியின் 11 பிளேயர்களில் ஒருவருக்கும் மட்டும், அதே அணியில் இருக்கும் ஒரே ஒரு வீரர் மட்டும் சப்ஸ்டியூட்டாக வைத்து, அவருக்கு பதில் பவுளிங் போடவும் பேட்டிங் செய்யவும் வைக்கலாம் என்ற விதி தான்.
அந்த விதியை ஒரு அணி பயன்படுத்தும் போது நடுவர் இவ்வாறான சமிக்ஞையை பயன்படுத்துவார் என்று ஐபிஎல் குழு அறிவித்துள்ளது.
