மும்பைக்கு தான் 2026 ஐபிஎல் கோப்பையா!! 12 முன்னாள் வீரர்கள் சொன்ன கணிப்பு..

Chennai Super Kings Mumbai Indians Punjab Kings Royal Enfield IPL 2026
By Edward Mar 28, 2026 09:45 AM GMT
Report

ஐபிஎல் 2026 

ஐபிஎல் 2026 தொடரின் 19வது சீசன் இன்று மார்ச் 28 ஆம்தேதி முதல் தொடங்கவுள்ளது. இன்று ஆர்சிபி - எஸ்ஆர்எச் அணிகள் மோதவுள்ளன. மும்பை மற்றும் சென்னை அணிகள் தலா 5 கோப்பைகளை கைப்பற்றி இருக்கும் நிலையில் 2026 ஐபிஎல் போட்டிகளில் வென்று பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவார்களா? என்ற ஆர்வம் அதிகரித்துள்ளது.

மும்பைக்கு தான் 2026 ஐபிஎல் கோப்பையா!! 12 முன்னாள் வீரர்கள் சொன்ன கணிப்பு.. | Ipl 2026 Playoffs Prediction 12 Experts Mi Win

இந்நிலையில் 12 முன்னாள் வீரர்கள் எந்த 4 அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் என்ற கணிப்பை கணித்திருக்கிறார்கள்.

12 முன்னாள் வீரர்கள் 

தென்னாப்பிரிக்க முன்னாள் கேப்டன் ஃபாப் டு பிளெசிஸ் - மும்பை, பெங்களூரு, பஞ்சாப், சென்னை அல்லது டெல்லி அணிகள் பிளே ஆஃப்க்கு தகுதி பெறும் என்று கூறியிருக்கிறார்.

முன்னாள் ஆல்ரவுண்டர் இர்பான் பதான், மும்பை, டெல்லி, பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய அணிகள் தகுதி பெறும் என்று தெரிவித்துள்ளார்.

ஹர்பஜன் சிங், மும்பை, ஹைதராபாத், பஞ்சாப் தகுதி பெறும் என்றும் கிரிக்கெட் விமர்சகர் ஆகாஷ் சோப்ரா, MI, RCB, DC, PK அணிகள் இடம்பிடிக்கும் என்று கூறியுள்ளனர்.

மும்பைக்கு தான் 2026 ஐபிஎல் கோப்பையா!! 12 முன்னாள் வீரர்கள் சொன்ன கணிப்பு.. | Ipl 2026 Playoffs Prediction 12 Experts Mi Win

இந்திய டெஸ்ட் பேட்ஸ்மேன் புஜாரா, மும்பை, குஜராத், சென்னை, கொல்கத்தா அணிகளிடம் பிடிக்கும் என்றும் முகமது கைஃப், மும்பை, பெங்களூரு, பஞ்சாப், டெல்லி அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் என்று தெரிவித்துள்ளனர்.

ஹனுமா விஹாரி, மும்பை, டெல்லி, ஹைதராபாத், பஞ்சாப் போன்ற அணிகளையும் பியூஸ் சாவ்லா, மும்பை, பெங்களூரு, கொல்கத்தா, பஞ்சாப் அணிகளும் செல்லும் என்று தெரிவித்துள்ளனர்.

முன்னாள் விக்கெட் கீப்பர் சபா கரீம், மும்பை, பெங்களூரு, டெல்லி, சென்னை அணிகளையும், முன்னாள் ஆல்ரவுண்டர் சஞ்சய் பாங்கர், மும்பை, பெங்களூரு, பஞ்சாப், டெல்லி அணிகளையும் லட்சுமிபதி பாலாஜி, மும்பை, பெங்களூரு, சென்னை, ஹைதராபாத் அணிகளையும் கூறியிருக்கிறார்கள்.

மேலும் வருண் ஆரோன், மும்பை, பெங்களூரு, ஹைதராபாத், சென்னை அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் என்றும் கூறியிருக்கிறார்கள்.

மும்பைக்கு தான் 2026 ஐபிஎல் கோப்பையா!! 12 முன்னாள் வீரர்கள் சொன்ன கணிப்பு.. | Ipl 2026 Playoffs Prediction 12 Experts Mi Win

மும்பை

அப்படி அனைத்து முன்னாள் வீரர்களும் மும்பை அணியை ஒருமித்த குரலில் தேர்வு செய்துள்ளனர். இம்முறை மும்பை இந்தியன்ஸ் அணி கோப்பையை வெல்லும் என்ற எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்திருக்கிறது.