திருமணம் செய்வதாக கூறி உல்லாசமாக இருந்த பிரபல நடிகையின் கணவர்.. இளம் பெண் புகார்
பாலிவுட் சினிமாவின் பிரபல கவர்ச்சி நடிகையாக இருப்பவர் தான் ராக்கி சாவந்த். இவர் 2006 -ம் ஆண்டு பிரபல பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று மக்கள் மனத்தியில் பிரபலமானார்.
இதைதொடர்ந்து இவருக்கு பல படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. நடனம், மாடலிங், நடிப்பு என அனைத்திலும் கலக்கி வருகிறார்.
ராக்கி சாவந்த் கடந்த ஆண்டு தொழிலதிபர் ரித்தேஷ் என்பவரை காதலித்து ரகசிய திருமணம் செய்து கொண்டார். ஆனால் இருவரும் சில ஆண்டுகளிலேயே தனிப்பட்ட காரணத்தால் உறவை முறித்து கொண்டனர். இதையடுத்து ராக்கி சாவந்த் அதில் துரானி திருமணம் செய்து கொண்டார்.

இளம் பெண் புகார்
இந்நிலையில் ராக்கி சாவந்தின் கணவர் அதில் துரானி மீது ஈரான் நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ளார்.
அந்த பெண் கூறுகையில், நான் மைசூரில் தங்கி மருத்துவ படிப்பை படித்து வருகிறேன். அப்போது என்னிடம் அதில் துரானி நட்பு ரீதியாக பழகினார். சில நாட்களுக்கு பிறகு நாங்கள் காதலித்து வந்தோம். அவர் எண்ண திருணம் செய்து கொள்வதாக கூறி என்னுடன் உல்லாசமாக இருந்தார்.
அதன் பின்னர் என்னுடன் பழகுவதை நிறுத்திவிட்டார். மேலும் நான் தனிமையில் அவருடன் இருந்த வீடியோவை வைத்து என்னை மிரட்டுகிறார் என்று புகார் அளித்துள்ளார். தற்போது இந்த செய்தி பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
