மனுசன மனுசனா நடத்துங்கய்யா! அது போதும்! குறவர் காலில் பால் அபிஷேகம்..

busdriver irular
By Edward Dec 12, 2021 01:00 AM GMT
Report

சமுதாயத்தில் பல பிரிவினைகள் ஏற்பட்டு ஒதுக்கப்படும் சூழல் ஒரு சில இனத்தவருக்கு நடக்கும். அதேபோல் சமீபத்தில் இருளர் சம்பந்தமான ஜெய் பீம் படம் பல தாக்கத்தினை ஏற்படுத்தியது. இதைதொடர்ந்து அவர்கள் மீதான சில சலுகைகள் அரசு அறிவித்தும் வந்தது.

இந்நிலையில் ஒரு பகுதியில் குறவர் சமுதாயத்தை சேர்ந்து சிலர் பேருந்தில் இருந்து இறக்கி விட்ட செய்தி பெரியளவில் பேசப்பட்டது. அதேபோல் மீன் விற்பனை செய்யும் வயதான மூதாட்டியை பஸ்சில் இருந்து இறக்கி விட்டுள்ளனர் பேருந்து ஓட்டுநர் நடத்துனர்கள்.

இதற்கு கடுமையான கண்டனம் எழுந்த நிலையில், பெரம்பூர் பேருந்து நிலைய பணிமனையில் இருளர் குடும்பத்தினரை பேருந்து ஓட்டுனர் அப்துல்மன்னா மற்றும் நடத்துனர் பூமணி அவர்கள் காலுக்கு பாலூட்டி ஆரத்தி எடுத்து வரவேற்றுள்ள வீடியோ வைரலானது.

இதற்கு சிலர் அந்த பாலை அவர்கள் கையில் கொடுத்திருந்தால் அதை குடித்து பசி தீர்த்திருப்பார்களே என்று கூறி வருகிறார்கள்.