பாக்கியலட்சுமி சீரியல்ல கோபி கேரக்டர் மாற்றமா.... இனி இவர்தானா?

Serials Baakiyalakshmi
By Yathrika Nov 08, 2022 06:15 AM GMT
Report

கோபி மாற்றமா

சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை ஏன் நமக்கே கோபி என்ற பெயரில் யாரை தெரிந்திருந்தாலும் இப்போதெல்லாம் முதலில் நியாபகம் வருவது சதீஷ் என்ற பாக்கியலட்சுமி சீரியல் நடிகர் தான்.

கோபி என்ற பெயரில் சதீஷ் நடிக்க ஆரம்பித்ததில் இருந்து ரசிகர்கள் அதிகம் ஆகிவிட்டனர், ஆனால் அதேசமயம் அவரை திட்டுவதற்கும் ஒரு கூட்டம் சுற்றிக்கொண்டு வருகிறது. மக்கள் சீரியலை சீரியலாக பார்க்காமல் நிஜமாக எடுத்துக்கொண்டு அவரை திட்டுகிறார்கள். இதுகுறித்து நடிகர் சதீஷும் நிறைய வீடியோ வெளியிட்டுவிட்டார்.

இந்த நேரத்தில் நடிகை ரேஷ்மா பாக்கியலட்சுமி ராதிகா கெட்டப்பில் ஒரு புதிய விளம்பரம் நடிக்க அவருடன் சஞ்சீவும் இணைந்து நடித்துள்ளார்.

இவர்களின் புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் என்னது கோபியை மாற்றிவிட்டார்களா என ஷாக் ஆகியுள்ளனர். ஆனால் உண்மையில் அது விளம்பரத்திற்காக எடுத்த புகைப்படம்.

பாக்கியலட்சுமி சீரியல்ல கோபி கேரக்டர் மாற்றமா.... இனி இவர்தானா? | Is Gopi Character Changed In Baakiyalakshmi