விக்னேஷ் சிவனின் தங்கையா இவர்? திருமணத்தில் எடுத்த போட்டோ வைரல்

Nayanthara Vignesh Shivan
By Parthiban.A Jun 12, 2022 10:50 AM GMT
Report

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமணம் சமீபத்தில் மிக பிரமாண்டமாக சென்னை மகாபலிபுரம் அருகில் ஒரு நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. அதில் சினிமா துறை பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டனர்.

மேலும் நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஆகியோரது மிக நெருக்கமான குடும்ப உறுப்பினர்கள் மட்டும் திருமண விழாவில் கலந்துகொண்டனர். மேலும் இரண்டு வாரங்களுக்கு பிறகு திருமண வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெற இருப்பதாக தகவல் வெளிவந்திருக்கிறது.

இவர் விக்னேஷ் சிவனின் தங்கையா?

இந்நிலையில் தற்போது திருமணத்தில் எடுத்த போட்டோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அந்த போட்டோவில் விக்னேஷ் சிவன் உடன் இருப்பது அவரது தங்கையா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

போட்டோ இதோ 

இருப்பினும் ஏற்கனவே விக்கி தனது தங்கை போட்டோவை ஏற்கனவே ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் என்பதால், இவர் அவரது உறவுக்கார பெண்னாக தான் இருக்கும் என தெரிகிறது.

 

GalleryGallery