என்னை அசிங்கப்படுத்திட்டாங்க! விஜய்சேதுபதி படத்திற்கு பிரச்சனை கொடுக்கும் இசைஞானி..

vijaysethupathi ilaiyaraaja kadaisivivasayi
By Edward Dec 02, 2021 06:00 AM GMT
Report

தமிழ் சினிமாவில் காக்கா முட்டை என்ற தேசிய விருது படத்தின்மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்தவர் இயக்குநர் மணிகண்டன். இதையடுத்து குற்றமே தண்டனை, ஆண்டவன் கட்டளை போன்ற படங்களை இயக்கினார்.

தற்போது விஜய் சேதுபது உள்ளிட்ட முக்கிய நடிகர் நடிகைகள் நடித்து வரும் கடைசி விவசாயி படத்தினை இயக்கி வருகிறார். இப்படத்தில் ஆரம்பத்தில் இளையராஜா தான் படத்தின் இசை அமைப்பதாக இருந்துள்ளது.

இளையராஜா சில பிரச்சனைகள் கொடுத்ததால் படக்குழு அவரின் அனுமதியில்லாமல் சந்தோஷ் நாராயணனிடம் ஒப்பந்தம் செய்துள்ளனர்.

இதனால் கோபமடைந்து என்னை அசிங்கப்படுத்தி படத்திலிருந்து எந்த அறிவிப்பும் இல்லாமல் நீக்கியதாக கூறி இசை அமைப்பாளர் சங்கத்திடம் புகாரளித்துள்ளார் இளையராஜா.

இதனால் விஜய் சேதுபதியின் கடைசி விவசாயி படத்திற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.