கணவரை விட்டு பிரிய இது தான் காரணம்.. உண்மையை உடைத்து கூறிய இசைவாணி

Bigg Boss Star Vijay
By Kathick Jul 10, 2022 06:30 AM GMT
Report

 கானா பாடல்கள் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் இசைவாணி. இந்த பிரபலத்தின் மூலம் கமல் ஹாசன் தொகுத்து வழங்கி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். பிக் பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து தற்போது பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் வேல்முருகனுடன் இணைந்து நடனம் ஆடி வருகிறார்.

இசைவாணிக்கு சில வருடங்களுக்கு முன் திருமணம் ஆகிவிட்டது. ஆனால், தற்போது இசைவாணி தனது கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார். அதை ஏன் அவர் மறைக்கிறார் என்று பல செய்திகள் அவர் பற்றி வெளிவந்தது. இந்நிலையில், முதல் முறையாக தனது கணவரை விட்டு ஏன் பிரிந்து வாழ்கிறேன் என்பது குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.

இதில் 'வழக்கமாக எல்லா பெற்றோரும் செய்வது போல எனக்கு திருமணம் செய்து வைத்தார்கள். கானா பாடல் பாட பெற்றோர் வீட்டில் இருந்த ஆதரவு எனக்கு கணவர் வீட்டில் கிடைக்கவில்லை. அதனால் தான் அந்த வீட்டை விட்டு வந்துவிட்டேன். தற்போது அவருக்கு வேறு திருமணம் கூட நடந்துவிட்டது. அந்த குடும்பத்துடன் நான் தற்போது தொடர்பில் இல்லை' என கூறியுள்ளார்.