1800 கேரட் வைர நெக்லஸ்!! உலகையே திரும்பி பார்க்க வைக்கும் அம்பானி மகள் இஷா...

United States of America Photoshoot New York Isha Ambani Model
By Jai May 06, 2026 08:30 AM GMT
Report

இஷா அம்பானி

இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர்களாக இருக்கும் முகேஷ் அம்பானி, இந்தியாவின் டாப் ரீடைல் நிறுவனமாக திகழ்ந்து வரும் ரிலையன்ஸ் ரீடைல் என பலவிதமான தொழில்களை ஆரம்பித்து கோடிக்கணக்கில் சம்பாதித்து வருகிறார்கள்.

1800 கேரட் வைர நெக்லஸ்!! உலகையே திரும்பி பார்க்க வைக்கும் அம்பானி மகள் இஷா... | Isha Ambani Couture For The Met Gala 2026

அந்தவகையில் ரிலையன்ஸ் ரீடைல் தற்போது முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி தலைமையில் இயங்கி வருகிறது. இந்தியாவை தாண்டி உலகளவில் பலதரப்பட்ட மக்களையும் அனைத்து வர்த்தகத்திலும் ரிலைன்ஸ் இருக்க வேண்டும் என்ற முக்கிய இலக்கோடு தங்களில் பிராண்ட் கடைகளை நாடு முழுவதும் திறந்து வருகிறார். விலையுயர்ந்த நெக்லஸ், பிரமாண்டமான ஆடையணிவதில் இஷா அம்பானி அதிக ஈடுபாடு காட்டுவார்.

Met Gala 2026

சமீபத்தில் அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் நடப்பு ஆண்டுக்கான Met Gala 2026 நிகழ்வு நடந்துள்ளது. நியூயார்க்கிலுள்ள ஆடை அருங்காட்சியத்திற்காக நிதி திறட்ட இந்நிகழ்ச்சி ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும். நடப்பாண்டு விழாவில் நடிகர்கள் பலரும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் அம்பானி மகள் இஷா அம்பானியும் கலந்து கொண்டு உலகையே திரும்பி பார்க்க வைத்திருக்கிறார்.

நீதா அம்பானியின் தனிப்பட்ட சேகரிப்பிலுள்ள பரம்பரை நகைகளை கொண்டு உருவாக்கப்பட்ட பிளவுஸ் அணிந்தும், பல கோடி மதிப்பிலான நெக்லஸ் அணிந்து இஷா அம்பானி சென்றுள்ளார். அவர் அணிந்துள்ள வைர நெக்லஸ் சுமார் ரூ.800 கோடி மதிப்புள்ளதாம். தன்னுடைய அம்மா இந்த நெக்லஸை பரிசாக கொடுத்ததாகவும் இஷா அம்பானி தெரிவித்துள்ளார்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery