ரிலையன்ஸ் ரீடைலில் நஷ்டம் நஷ்டம்.. 3,650 கடைகளை இழுத்து மூடிய ஈஷா அம்பானி..
ஈஷா அம்பானி
இந்தியாவின் டாப் ரீடைல் நிறுவனமாக திகழ்ந்து வரும் ரிலையன்ஸ் ரீடைல் பலவிதமான தொழில்களை ஆரம்பித்து கோடிக்கணக்கில் சம்பாதித்து வருகிறார்கள் அந்தவகையில் ரிலையன்ஸ் ரீடைல் தற்போது முகேஷ் அம்பானியின் மகள் ஈஷா அம்பானி தலைமையில் இயங்கி வருகிறது.
இந்தியாவை தாண்டி உலகளவில் பலதரப்பட்ட மக்களையும் அனைத்து வர்த்தகத்திலும் ரிலைன்ஸ் இருக்க வேண்டும் என்ற முக்கிய இலக்கோடு தங்களில் பிராண்ட் கடைகளை நாடு முழுவதும் திறந்து வருகிறார்கள். இத்தனை ஆண்டுகளாகியும் கடைகளின் எண்ணிக்கை மட்டுமே அதிகரித்ததே தவிர வாடிக்கையாளர்கள், வருமானங்களின் எண்ணிக்கை உயரவில்லை.
ரிலையன்ஸ் ரீடைல்
இந்நிலையில் ஈஷா அம்பானி நாடு முழுவதும் இருக்கும் ரிலையன்ஸ் நெட்வொர்க் கடைகளில் லாபம் ஈட்டமுடியாத கடைகள் மற்றும் பிரேக் ஈவென் எட்டாத கடைகளை மூட திட்டமிட்டுள்ளனராம். அதன் முதற்கட்டமாக ரிலையன்ஸ் ரீடைல் பிராண்டுக்கு கீழ் திறக்கப்பட்ட புதிய கடைகள் 6 முதல் 12 மாதங்களுக்குள் லாபம் ஈட்ட வேண்டும் என்ற உத்தரவை ஈஷா அம்பானி பிறத்துள்ளாராம்.
ஆண்டுக்கு 1,000-க்கும் மேற்பட்ட கடைகளைத் திறந்த ஈஷா அம்பானி, இனிமேல் 500 முதல் 550 கடைகள் மட்டுமே திறக்க திட்டமிட்டுள்ளாராம். 2023-ஆம் நிதியாண்டில், இந்நிறுவனம் 3,300-க்கும் மேற்பட்ட கடைகளைத் திறந்திருந்தது பலரையும் ஆச்சிரியத்தில் மூழ்கடித்தது. கடந்த மூன்று நிதியாண்டுகளில், 3,650-க்கும் மேற்பட்ட லாபமற்ற கடைகள் மூடியுள்ளது ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனம்.