2836 கோடி வசூல் வேட்டை!! ஜஸ்ட் மிஸ்ஸில் தப்பித்த அம்பானி மகள் ஈஷா அம்பனி..
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ரீடைல்
இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக சாம்ராஜியத்தை வைத்திருக்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ரீடைல் பிரிவான ரிலையன்ஸ் ரீடைல் வென்ச்சர்ஸ் நிறுவனத்தை முகேஷ் அம்பானி மற்றும் அவரது மகள் ஈஷா அம்பானி இணைந்து நிர்வகித்து வருகிறார்கள்.
தற்போது செப்டம்பர் மாதத்துடன் முடிந்த காலாண்டில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் நிகர லாபம் 1.3 சதவீதம் அதிகரித்துள்ளதாம். கடந்த ஆண்டு 2800 கோடி பதிவு செய்த நிலையில் இந்த காலாண்டில் 2836 கோடி லாபத்தை ஈட்டியிருக்கிறது. ஆனால் ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்தின் செயல்பாடுகளில் இருந்து 2.5 கோடி குறைந்து ரூ.66502 கோடியாக உள்ளது.
இதை ஒழுங்குபடுத்த அதிகப்படியான முயற்சிகளை ஈஷா அம்பானி தொடர்ந்துள்ளார். இதனால் நிகர வருவாய் குறைந்தபோதிலும் மொத்த வருவாய் 76302 கோடியை எட்டியிருக்கிறது. வருடாந்திர வருவாயில் 1.1 சதவீதம் குறைந்துள்ளது.
ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்தின் EBITDA அளவு 0.3 சதவீதம் அதிகரித்து ரூ. 5,850 கோடியாக உயர்ந்துள்ளது. மேலும், நிறுவனத்தின் செயல்பாடுகளில் மூலம் கிடைக்கும் EBITDA ரூ. 5,675 கோடியுடன் 1 சதவீதம் உயர்வைப் பதிவு செய்துள்ளது.
இதேபோல் EBITDA மார்ஜின் அளவு 8.8 சதவீதம் ஆக 30 அடிப்படை புள்ளிகள் உயர்ந்துள்ளது. முகேஷ் அம்பானியின் மொத்த ரீடைல் கடைகள் 18946 உள்ளது. மொத்தக்கடையின் பரப்பளவு 70.4 மில்லியன் சதுரடியாக இருந்து வருடாந்திரம் 14 சதவீதம் வாடிக்கையாளர்களை அதிகரித்து 297 மில்லியனாக உள்ளது.