யானை மாதிரி ரவுண்டா என் முகம் இருக்கும்.. உடல் எடை குறைத்தது பற்றி பேசிய குஷ்பூ

Kushboo Actress
By Kathick Mar 13, 2026 02:30 AM GMT
Report

90ஸ்-களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் குஷ்பூ. ரசிகர்களின் மனம் கவர்ந்த இவருக்கு கோவில் கூட கட்டினார்கள். இது மிகப்பெரிய அளவில் அப்போது பேசுபொருளானது.

இந்த நிலையில், Chubby-யாக இருந்த நடிகை குஷ்பூ, திடீரென தனது உடல் எடையை குறைத்து ஆளே மாறிவிட்டார். தனது உடல் எடையை எப்படி குறைத்தேன், என்னவெல்லாம் அதற்கு கடைபிடித்தேன் என ஒரு பேட்டியில் குஷ்பு கூறியுள்ளார்.

யானை மாதிரி ரவுண்டா என் முகம் இருக்கும்.. உடல் எடை குறைத்தது பற்றி பேசிய குஷ்பூ | Kushboo Talk About Weight Loss

அதில் அவர், "அண்ணாத்த பட படப்பிடிப்பு சமயத்தில் நான் 98 கிலோ எடை இருந்தேன், கொஞ்சம் விட்டால் Century அடித்திருப்பேன். இப்போது 55 வயசானாலும் தனக்கு பிபி, சுகர் எதுவும் இல்லை, ஆரோக்கியமாக இருப்பது முக்கியம். என் அம்மாவுக்கு High பிபி இருந்தது, ஆனால் மைக்ரேன், சைனஸ் பிரச்சனைகளை அம்மா எனக்கு கொடுத்துட்டாங்க, பிபியை கொடுக்கல.

"யானை மாதிரி ரவுண்டா என் முகம் இருக்கும். கடைசியில, பிபி வராம இருக்கணும், முட்டி வலி போகணும்னா வெயிட்டைக் குறைச்சே ஆகணும்னு சொல்லிட்டாங்க. கோவிட் நேரத்துலதான் வெயிட் குறைக்க ஆரம்பிச்சேன்" என குஷ்பூ கூறியுள்ளார்.

யானை மாதிரி ரவுண்டா என் முகம் இருக்கும்.. உடல் எடை குறைத்தது பற்றி பேசிய குஷ்பூ | Kushboo Talk About Weight Loss