இளையராஜா பேச்சை மதிக்காத வைரமுத்து!! இருவருக்கு இடையில் இப்படியொரு பிரச்சனையா..
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராகவும் இசைஞானியாகவும் திகழ்ந்து வருபவர் இளையராஜா. அவருடன் பல பாடகர் பாடகிகள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள், பாடலாசிரியர்கள் பணியாற்றி வந்துள்ளனர்.
ஆனால் அவர்களுடன் ஏதாவது ஒரு பிரச்சனையை ஏற்படுத்தி அந்த நட்பை கெடுத்துக்கொள்வது இளையராஜா வழக்கமாக வைத்துக்கொண்டு வந்தார். அப்படி இது ஒரு பொண்மாலை பொழுது என்ற பாடலில் இளையராஜா சில வரிகளை மாற்ற வைரமுத்துவிடம் கூறியிருக்கிறார்.
வைரமுத்து மாற்றமுடியாது என்று கண்டீசன் போட்டு இருவரின் கூட்டணியும் பிரியகாரணமாக அமைத்துக்கொண்டார். அதன்பின் இருவரும் சேர்ந்து பணியாற்றாமல் பகைவர்களாக திகழ்ந்து வருகிறார்கள்.
இந்நிலையில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட உண்மையான சண்டை என்ன என்று பிரபல பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு தெரிவித்திருக்கிறார். வார பத்திரிக்கை ஊடகம் ஒன்று இளையராஜாவை ஒரு தொடர் எழுதும் படி கேட்டுக்கொண்டுள்ளனர்.
தனக்கு நேரமில்லை என்று கூறி நண்பர் வைரமுத்துவை எழுத கூறியிருக்கிறார். ஆனால் இது பற்றி எதையும் வெளியில் கூறக்கூடாது என்று வைரமுத்துவிடம் இளையராஜா கேட்டுக்கொண்டுள்ளார். தொடரும் வெளியாகியது.
இதனை ஊடகம் ஒன்றிற்கு பேட்டிக்கொடுத்த போது அந்த தொடரை நான் தான் எழுதினேன் என்று கூறிவிட்டார். இதனால் கடுப்பாகி கோபப்பட்டதால் தான் இருவரும் இன்றுவரை பிரிய காரணமாக அமைந்திருக்கிறது.