பிளாஸ்டிக் சர்ஜரி மூஞ்சி.. கலாய்த்தவருக்கு பதிலடி கொடுத்த ஐஸ்வர்யா மேனன்..

Indian Actress
By Edward Aug 20, 2022 07:19 AM GMT
Report

சின்னத்திரையில் சீரியலான தென்றல் தொடரில் சிறு கதாபாத்திரத்தில் நடித்தவர் ஐஸ்வர்யா மேனன். மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வந்த ஐஸ்வர்யா 2009ல் இருந்து சீரியல் நடிகையாக நடித்து வந்தார்.

இதன்பின் 2013ல் ஆப்பிள் பெண்ணே என்ற திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமாகினார். பின், தீயா வேல செய்யனும் குமாரு, வீரா உள்ளிட்ட ஒருசில படங்களில் சிறு ரோலில் நடித்து வந்தார். நடிகர் மிர்ச்சி சிவா நடித்த தமிழ் படம் 2வில் அவருக்கு ஜோடியாக நடித்தும் நான் சிரித்தால் படத்தில் ஹிப்பாப் ஆதிக்கு ஜோடியாக நடித்தும் பிரபலமானார்.

இதனைதொடர்ந்து க்ளாமர் ஆடைகளை அணிந்து இணையத்தில் போட்டோஷூட் எடுத்து பதிவிட்டு வருகிறார். ஆரம்பத்தில் அடையாளம் தெரியாமல் சுமார அழகோடு இருந்த ஐஸ்வர்யா மேனன் தற்போது வாய்ப்பிளக்கும் அளவிற்கு மாறியுள்ளார்.

இதனை சிலர் பிளாஸ்டிக் சர்ஜரி மூஞ்சி என்றும் கலாய்த்து வந்தனர். இதுகுறித்து சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், நாம் கடைசி மாதம் எடுத்த புகைப்படத்திற்கு இந்த மாதம் எடுத்த புகைப்படத்திற்கும் சில வித்தியாசங்கள் காணப்படும்.

அவ்வாறு கிரோமிங் செய்து இருப்போம். இதுபோன்ற நெகடிவிட்டி விசயங்களை கண்டுகொள்ளாமல் செல்ல வேண்டும் என்று கூறியுள்ளார்.

Gallery