அந்த மாதிரியான காட்சியில் நடித்த இவானா .. வழியனுப்பி வைத்த அவரின் அம்மா..
கடந்த ஆண்டு பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த "லவ் டுடே" திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. சின்ன பட்ஜெட்டில் உருவான இப்படம் பல கோடி வசூல் செய்து சாதனை படைத்தது.
இப்படத்தில் ஹீரோயினாக 23 வயதான இவானா நடித்திருந்தார். இவர் இதற்கு முன்பு இயக்குனர் பாலா இயக்கத்தில் வெளிவந்த நாச்சியார் படத்தில் நடித்திருப்பார்.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற இவானாவிடம் தொகுப்பாளர், லவ் டுடே படத்தில் படுக்கை அறை, லிப் லாக் காட்சிகளில் நடித்ததற்கு பெற்றோர்கள் என்ன சொன்னார்கள்? இதற்கு சம்மதம் தெரிவித்தார்களா? என்று கேள்வி கேட்டுள்ளார்.
பதில் அளித்த அவர், "நான் என் அம்மாவிடம் இந்த மாதிரியான காட்சிகள் படத்தில் இருக்கிறது. இது படத்திற்கு தேவையான காட்சி என சொன்னேன். அதற்கு அம்மா, படத்திற்கு தேவை என்றால் நடித்துக்கொள் என்று கூறினார். இதன் பின்னர் என்னால் தயக்கம் இல்லாமல் அந்த மாதிரியான காட்சியில் நடிக்க முடிந்தது" என்று பதில் அளித்துள்ளார்
