சுதா நீங்கள் Fraud..மோசமான படம் பராசக்தி!! கடுமையாக விமர்சித்த பிரபலம்..
சுதா கொங்கரா
நம்பிக்கையான இயக்குநர்களில் ஒருவர் என ரசிகர்கள் மத்தியில் பெயர் எடுத்திருப்பவர் சுதா கொங்கரா. இறுதிச்சுற்று, சூரரைப்போற்று போன்ற மாபெரும் வெற்றிப்படங்களை கொடுத்திருக்கிறார். இவர் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த படம் பராசக்தி.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றன. இதுவரை உலகளவில் இப்படம் ரூ. 60 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கிறது.

இந்நிலையில், சமீபத்தில் சுதா கொங்கரா அளித்த பேட்டியொன்றில், விஜய் ரசிகர்கள் என்று நேரடியாக சொல்லாமல் கடுமையாக விமர்சித்து பேசியிருக்கிறார்.
அதாவது நாங்கள், மோசமான ரவுடிகள், குண்டர்களை கடந்து தான், அவர்கள் கொடுக்கும் சவால்களையும் நெருக்கடிகளையும் கடந்துதான் படத்தை மக்களிடத்தில் கொண்டு சேர்க்கும் பணிகளை செய்து வருகிறோம் என்று கூறியிருப்பது விஜய் ரசிகர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியது.
ஷாலின் மரியா லாரன்ஸ்
தற்போது, நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவரும் எழுத்தாளருமான ஷாலின் மரியா லாரன்ஸ் தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் சுதா கொங்கராவை விமர்சித்து பதிவு ஒன்றினை பகிர்ந்துள்ளார்.
அதில், சுதா நீங்கள் ஒரு ஃபிராடு, நீங்கள் எடுத்தது மோசமான படம், அதை ஒப்புக்கொண்டு நகருங்கள் என்று கூறியிருக்கிறார். அவரின் இந்த பதிவிற்கு நெட்டிசன்கள் ஆதரவாக கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்..