முல்லைக்கு தேர் கொடுத்தான் பாரி! போன மேட்ச் திட்டுனத்துக்கு சாரி..ஜடேஜா

cricket jadeja india team t20worldcup semifinal
By Edward Nov 07, 2021 11:30 AM GMT
Report

உலககோப்பை டி20 போட்டிகள் கடும் போட்டியில் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே பாகிஸ்தான், இங்கிலாந்து அணிகள் அரையிறுதி சுற்றுக்கு சென்றுள்ளது. இதில் நியூசிலாந்து மற்றும் இந்திய அணியில் யார் இறுதி சுற்றுக்கு செல்வார்கள் என்று எதிர்ப்பார்க்க நியூசிலாந்து மற்றும் நமீபியா அணியின் போட்டில் தான் தெரியவரும்.

இப்போட்டியில் நமீபியா ஜெய்த்தால் இந்தியா அரையிறுதி போட்டிக்கு செல்ல வாய்ப்புள்ளது. நியூசிலாந்து அணி வெற்றிபெற்றால் இந்தியா மூட்டைமுடிச்சு எடுத்துக்கொண்டு போகவேண்டியதுதான். இந்திய அணி சார்ப்பாக போன ஆட்டம் முடிந்து வெற்றி நாயகனாக இருந்த ஜடேஜா செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அதில் தோல்விகள் குறித்த கேள்விகளுக்கு, நாங்கள் மூன்று ஆண்டுகளாக உயிரை கொடுத்து நல்ல ஆட்டத்தை கொடுத்து வந்தோம். ஒருசில தோல்விகளால் இந்திய அணியை குறைத்து விமர்சித்து பேசக்கூடாது என்று பதிலடி கொடுத்துள்ளார்.